பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 அறிவும் கலைத் திறனும் இருக்கும். அவர் இந்த நாடகக் காப் பியத்தை எழுதுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர். கருணாநிதியின் தமிழ் நூலை ஆங்கிலத்தில் நண்பர் டி.ஜி. நாராயணசாமி நல்லமுறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். செய்யுள் வடிவமாக இருக்கும் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியமாக ஆக்கிய பிறகு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது, அதிலும் செய்யுள் உருவில் தருவது என்பது கடினமானது. ஆனால் அச்சுவை கெடாமலும் பயன் மிகுந்தும் காணப்படுகிற அளவில் ஆங்கிலத்தில் இந் நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. காப்பியங்களை இன்னும் கருணாநிதி தமிழ்ப்பெருங் நாடகங்களாக ஆக்கித் தரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதில் பெருமைப் படுகிறேன்.

இப்படிப்பட்ட தமிழின் பெருமைபற்றி மாநாடுகளில் கூடிப் பேசுவதில் மட்டும் திருப்தியடையாமல் தமிழ் இலக் கியத்தின் கருத்துக்களை எல்லா மக்களும் உணரத்தக்க விதத் தில் இனிய - எளிய நூல்களாக்கி வெளியிடுவதில் முனைந்து நிற்கவேண்டும். அந்தக் காரியத் தில் ஈடுபட்டுள்ள கருணாநிதியை மீண்டும் வாழ்த்துகிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப் பெற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த நண்பர் ஜோர் தான் அணிந்திருந்த தமிழ் உடையைப் பார்த்தால் அவரும் திருவாரூரோ என்று எண்ணும் அளவில் இருந்தது. தமிழ் நூலைப் பெற்றுக்கொண்ட இலங்கை அமைச்சர். திருச்செல்வத்தின் துணைவியார் திருமதி திருச்செல்வம்