பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67 வனாக, பண்பாளனாக மாறவேண்டும். என்று அறிவுப் பிரச் சாரம் செய்தவர். எந்த நாட்டிலும், இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கவேண்டிய காரியங்களை 20 ஆண்டுகளில் 'செய்து முடிக்க வேண்டும் எனக் கருதி திட்டமிட்டு செய்து முடிப் பார். நான் கல்லூரியை விட்டு வந்த காலத்தில் எங்கெங்கோ சிக்க வேண்டியவன். அங்கெல்லாம் சிக்காமல் பெரியாரிடம் தான் சிக்கிக் கொண்டேன். இப்பொழுது 'கிடைக்கும் பெரு மையும் மகிழ்ச்சியும் இனி கிடைக்கப் போகும் பெருமை யும் மகிழ்ச்சியும் இதற்கு முன்பெற்ற பெருமையையும் மகிழ்ச்சியையும் விட அதிகமாக இருக்க முடியாது. நீதிக்கட்சி அழிந்து போகும் நிலைமையில் இருந்த சமயம் அந்த நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, அந்த நீதிக்கட்சி என்ற யந்திரத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்ற என்ஜினைப் பூட்டி இயக்க ஆரம்பித்தார். திருச்சியில் நடைபெற்றதி.க. மாநாட்டில், முதல் நாள் பெய்த பெருமழையால் மாநாட்டுப் பந்தல் பூராவும் தண்ணீர் தேங்கி நின்றது. மறு நாள் மாநாடு நடக்குமா என்று எண்ணிக் கொண்டிருந்தோம். பெரியார் எடுத்துக் கொண்ட துணிவான முயற்சியால் இரவோடு இரவாக தண் ணீரை யெல்லாம் வெளியேற்றி, அங்குள்ள சேற்றையெல் லாம் அப்புறப்படுத்தி, குறித்த காலத்தில் மாநாடு நடை பெற்று முடிந்தது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால் மாநாட்டிலிருந்த சேற்றை மட்டுமல்ல தமிழகத்தின் மக்க ளின் நெஞ்சிலே ஊறிப்போன சேற்றை களைந்தெறிந்து பகுத்தறிவு நல்லுணர்வு ஊட்டியவர். என்பதனைக் கூறிடத் தான். அவரைப் பார்த்து பல்லோரும் பல சமயங்களிலும் கேட்டது என் நினைவுக்கு வருகிறது. நீங்கள் பேசும் பகுதி களில் ஆயிரத்தில் ஒன்று பேசினாலும், எங்களை தடுத்து விடு