பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

இனிய மனிதர் காஞ்சி மணிமொழியாருக்கு 60. வயதாகிவிட்டது என்று நண்பர்கள் கூறியபோது இவ்வளவு வயதாகிவிட் டதா என்று மலைத்துப்போய் விடுவோம். காரணம் அத்த கைய இளமைத் தோற்றத்துடன் இருப்பவர். இதுவரை நாட்டுக்கு அவர் எந்தவிதமான தொண் டாற்றினாரோ அதே தொண்டைத் தொடர்ந்து ஆற்றி எந்தவிதமான இலட்சிய நாட்டைக் காணவேண்டும் என்று கனவு கண்டாரோ -- அதைக் காணும்வரை இடைவிடாது. பாடுபட வேண்டும் என்று அவரை வேண்டுவதுதான் நாம் அவருக்கு தெரிவிக்கும் பாராட்டு! அதைத்தான் அவர் எதிர்ப்பார்ப்பார். - இத்தனை வயதாகிவிட்ட பிறகு நம்மிடம் அவர் எதிர்' பார்ப்பது எதுவும் இருக்காது. ஏனெனில் இளமையிலேயே அவர் எதிர்பார்க்கவில்லை. கழகம் எந்தவிதமான கட்டளை யிட்டாலும் அதை நிறைவேற்றியவர் மணிமொழியார்... தடியடி படுவதுதான் தமிழ் காக்கும் முறை என்றால்-தடியடி படத் தயாரானார்! சிறை செல்வது தான் செந்தமிழ் காக்கும் வழி என்றால் சிறை செல்லத் தயாரானார்! காடு மேடு சுற்றிப் பிரச்சாரம் செய்வதுதான் தமிழின் பெரு. மையை உணரச் செய்யும் வழி என்றால் அப்படிக் கடுமை யான பிரச்சாரத்தைச் செய்யத் தயாரானார். ஏடுகளை வெளியிடுவது தான் இன்தமிழை வளர்க்கும் பணி என்றால்-- அவர் ஏடுகளை நடத்தியிருக்கிறார்; இதழ்களை வெளியிட்டி யிருக்கிறார். மாநாடுகளைக் கூட்டியிருக்கிறார்-தமிழ் ஆர்வத் தைக் காட்டியிருக்கிறார்.