பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மனித இனத்தின் ஊதியம் உலகில் புகழ் வேண்டாம் என்று கூறுபவர்கள் மூன்று வகைப்படுவர். ஒன்று-புகழ் நமக்கு வராது என்று தெரிந்து கொண்டிருப்பவர்கள். இரண்டு - தேவைக்கு மேல் புகழைச் சேர்த்து வைத்திருப்பவர். மூன்று - புகழின் பயனை அறியா தவர்கள். ஆனால், ஈதல், இசைபட வாழ்தல் (புகழுடன் வாழ்தல்) ஆகியவைதான் மனித உயிருக்கு ஊதியம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருந்தகை கட்டளையிட் டிருக்கிறார். அத்தகைய புகழ்வாழ்வை மேற்கொண்டவர் ராசா சர் முத்தையாச் செட்டியார் அவர்கள். நான் அவருடன் பல துறைகளில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். வணிகத் துறை ஒன்றைத் தவிர! !ஒரே அரசியல் கட்சியில் (ஐஸ்டிஸ் கட்சியில்) நாங்கள் அங்கம் வகித்திருக்கிறோம். என்னை அந்தக் கட்சியின் சார்பில் சென்னை கார்ப்பரேஷனுக்கு நிறுத்தி வைக்கக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் கூடிப் பேசினர். அப்போது சிலர் 'அண்ணாதுரை தேர்தலில் ஈடுபடும். அளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என்ற ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் முத்தையா செட்டி யார் அவர்கள்தான் "இது போன்ற கண்ணோட்டம் இனிக் கூடாது. வாலிப வயதில் பொதுத் தொண்டில் ஆர்வம் இருப்பவர்கள் தான் இனித் தேர்தலில் நிற்க வேண்டும். ஆகவே அண்ணாதுரையை நிறுத்தலாம்” என்று வாதாடி