இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140
உணர்வின் எல்லை
என்று ஓதிய தொல்காப்பியர், தாம் கூறிய உரிப் பொருள்களுள் ஊடலை இறுதிக்கண் வைத்த நுட்பமும், ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறள்களால் உலகை அளந்த உத்தமர்,
‘ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங்
என்ற மணிமொழியைத் தமிழ் மறை நூலின் இறுதித் திருமொழியாக வைத்ததன் திட்பமும் புலனாகின்றன.