பக்கம்:உணர்வின் எல்லை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

உணர்வின் எல்லை

என்ற வள்ளுவர் பொன் மொழி அவர் கருத்துலகில் ஒளி வீசியது.

ஆன்றாமுலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்ல தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ! (புறம் 34)

என்று உணர்ச்சி ததும்பப் பாடலானார். இது புறநானூற்று உலகில்! இனி, சிலப்பதிகார உலகிற்குச் செல்வோம். அங்கே ஓர் அருமையான காட்சி! இலக்கியம் அன்றாட வாழ்வில் பயன்படும் அற்புதம்! காண்போம்.

சிலப்பதிகாரக் காலத்திலேயே தமிழ் நாட்டிலே இராமாயண—மகாபாரத— நளச் சக்கரவர்த்தி கதைகள் எல்லாம் நன்கு பரவியிருந்தன. அவை பற்றிய குறிப்புக்கள்—பழமொழியாய்—நெடுமொழியாய்—விளங்கும் பான்மைபெற்றமைந்தன!

கோவலன் கண்ணகி கதை அனைவரும் அறிந்த ஒன்றே.


                                      ‘............ யாவும்
சலப்புணர் தொள்கைச் சலதியொடுஆடிக்
குலம் தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலப்பாடு நாணுத் தரும்’