பக்கம்:உணர்வின் எல்லை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

உணர்வின் எல்லை

பாலூட்டும் மண்ணுலகத்துக் காட்சியில் விண்ணுலகத்தை—விண்ணுலகக் காட்சியை—விண்ணுலக இன்பத்தைக் காண்கிறார் கவியரசர் கம்பர்! பால் நிலாவைக் கண்டதும் குவியும் பைந்தாமரையைப் போல, வெள்ளிய பாலில் படும் பாவையர் கைத்தாமரையும் குவிகிறதாம்! குவிந்தகையால் குழந்தைகட்கு அருள் தெய்வங்கள் பாலூட்டுகின்றனவாம்! ஆம்; பால் நிலவைக் கண்டு குவியும் பசுந்தாமரைபோல—பசுப்பாலைக் குழந்தைகட்குப் புகட்டக் குவியும் தாயரின் திருக்கரம்போல்—கம்பன் கவிதையைக் கற்கும் நம் உள்ளமும் அவன் கற்பனையில் குவிந்து விடுகிறது! உம்பர் நாட்டு இன்பத்தினும் உயர்ந்த கம்பநாடன் கவிதை இதோ:

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாயமு தொழுகு மக்களைப்
பாலி னூட்டுவார் செங்கை பங்கயம்

வானி லாவுறக் குவிவ மானுமே!

4

தமிழிலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததொரு இலக்கிய வகை ‘பிள்ளைத்தமிழ்’. தெய்வங்களை எல்லாம் குழந்தைகளாகப் பாவித்துத் தனி நூல்களே பாடும் இவ் இலக்கிய மரபு, உலகில் வேறு எம்மொழியில் உண்டு! தனிச் சிறப்பு வாய்ந்த இவ்விலக்கிய மரபைப் பின்பற்றி எழுந்த பிள்ளைத் தமிழ் நூல்கள்—பக்திச்சுவை கனிந்த பாடல்கள்—பேரின்பம் தரும் சிற்றிலக்கியங்கள்—பலப் பல.