பக்கம்:உணர்வின் எல்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

9

“வீடாளும் வாணியங்கை மேலே யிருந்தாயோ?
ஏடாக வுன்மே விழுந்தாளோ?” —தமிழ்விடு தூது

என்று ஐயுற்று நயமாகக் கேட்கின்றார், அருந்தமிழ் அன்னையை ஆர்வத்துடன் ஒரு கவிஞர்.

கலைமகளுக்குக் கவிஞர் கவிதையிலே–அதுவும் கன்னிப் பூந்தமிழ்க் கவிதையிலே ஒரு தனி விருப்பம்—தனியா விருப்பம் உண்டு. பாரதியார் ஒரு பாடலில்,

கலைமகளும் தமிழ்க் கவிஞர்களும்

கள்ளைக் கடலமுதை—நிகர்
     கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்தில்—எனைப்

     பேணவத் தானருள் பூண வந்தாள்

என்று இறுமாந்து கூறுகிறார்.

பிறிதொரு பாட்டிலும்,

... ... ... — “என்றன்

வாயிலு மதியிலும் வளர்த்திடுவீர்!”

என்று ‘அன்னை’ வாணியை அழைக்கிறார்.

அடுத்தது ஒரு கருத்து : கலை மகள் ஏதோ தெள்ளித்தெளிக்கும் பனுவற்புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்கலாம் என்று கருதி, அன்னார் பால் அன்பு மீதூர, அவ்வன்பு காரணமாக அருள் செய்கின்றாள். என்றாலும், கவிஞர்கள் வாணியைத் தங்கள் கற்பனை வலையில் சிக்க வைப்பதில் பெருவிருப்புடையவர்கள்.