பக்கம்:உணர்வின் எல்லை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமிக்குப் பாரம் ; சோற்றுக்குக் கேடு

189


என்பது அக்கவலையால் அவர் வாய் மலர்ந்த குறள்.

(புகழ் பெறாமல், வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும் - டாக்டர். மு.வ)

பூமிக்குப் பாரமாய் இருப்பவர்களைப்பற்றி அறுத்துப்பாலில் எண்ணியது போன்றே, திருவள்ளுவர் பொருட்பாலிலும் அவர்களைப்பற்றி எண்ணி மனம் புழுங்குகிறார்.

'வெருவந்த செய்யாமை' என்ற அதிகாரத்தில், கடுங்கோலின் கொடுமையால் விளையும் துதங்களை எடுத்துரைக்கிறார். 'எங்கள் அரசன் கருமையானவன்' என்று மக்களால் காற்றப்படும்படி ஆட்சி செலுத்தும் மன்னவன் கோல் கடுங்கோல். அந்தக் கடுங்கோலுக்கு அச்சம் நிறைந்த, ஆட்சிக்கு-கல்வி அறிவு இல்லாதவர்களே 'அமைச்சர்'களாய் இருப்பார்கள். அத்தகைய ஆட்சியையும் - ஆட்சியாளரையும் போல நிலத்துக்கு வேறு சுமையில். இதனைக் கூறுங்குறள்,

'கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை' (570)

என்பது.

(கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை. டாக்டர் மு. வ.)