பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9垒 லா, ச. ராமாமிருதம் அம்பாள் சன்னதி காலி, குருக்கள் பூட்டிக்கொண்டே போய்விட்டார். கிராதிக் கதவு வழியே உள்ளே பார்வையைக் கவித்துக் கொள்கிறேன். கவிந்த இருளில் அகல்களின் மங்கிய சுடர் களுக்குப்பால், அவள் லேசாக விளிம்பு கட்டுகிறாள். சிக்குப் பிடித்து, சாயம் தேய்ந்த தோம்பில் பரிதாபமாக நிற்கிறாள். இவள் கதியே இப்படி ஆனால் சுவாமியைப் பற்றி கேட்கவே வெண்டாம். பார்த்துவிட்டேன். எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் நிலைமை ஒரே நிலைமைதான். எப்பவுமே உத்ஸவர்தான் 'மாப்பிள்ளை' பிரம்மோத் எவம் வேறே. மதுரையிலும், லிங்கத்தின் ஆவடையாரைச் சுற்றி அழ்-ழு-க்கு வஸ்திரம்தான். ஆனால் அம்மாவுக்குப் பூஜைக்குப் பூஜை, பட்டுப் புடவை மாற்றிய வண்ணம்தான், ராஜாத்தியாச்சே! அந்த அட்டஹாலமும் தர்பாரும், சன்னதியில் சதா கூட்டமும்!... ஐயா, ராஜாத்தி மணந்த பிச்சைக்காரன்! முதன் முறையாக மதுரை கோவிலுக்குச் சென்றபோது -அதே இருபது வருடங்களுக்குமுன் சன்னதியின் கிராதிக் கம்பிகளின் இருமருங்கிலும் தாங்கமுடியாத நெரிசலில், கர்ப்பக்ருஹத்தை ஒட்டிப் பக்கவாட்டில் ஒரு வாசல் சுலப மாகவும் கூட்டமே இல்லாதிருக்கிறது. "ஐயோ ஏன் கண்டப்படுகிறார்கள்? இவர்களுக்குப் புத்தியில்லையா? கண்ணில்லையா?" என்று எனக்குள் சிரித்துக்கொண்டு அந்த வாசலில் துழைய பத்தனிக்கையில் ஒரு சிக தடுத்தது. "எங்கே போகிறீர்?"