பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக I 67 உறவு. இவ்வளவு சுருக்கில் எவ்வளவு குண்டாகிவிட்டது: மதமதப்பில், ஒடி உருண்டு விழுந்து எழுந்து ஓயாத சுறுசுறுப்பில் அது வளைய வந்தது. ஒளிக்கதிரின் விளையாட்டுப் போல்...பின்பாகத்தைத் துரக்க முடியாமல் துரக்கிக்கொண்டு ஒரு பக்கமாகச் சாய்த்து அது ஒடுகையில் சிரிப்பு வருகிறது. என் நெஞ்சில் ஒரு அமைதி இறங்குகிறது. இந்த வீட்டில் குழந்தை விளையாடி வருடங்கள் பல பல ஆகிவிட்டன. எங்கள் பிரியத்தை நாங்கள் அதன்மேல் கொட்டவில்லை. ஆனால் அதன் பிரியத்தைக் காட்டுவதில் அது சிக்கனமாயில்லை. இதோ, என் காலை நக்கிவிட்டு, முன்னங்கால்களை என்மேல் வைத்து என் முகத்தை எட்டப் பார்க்கிறது, வேட்டி அழுக்காகிறது. இதற்கு ஓரளவு கால் முளைத்த வுடன் எங்கேயாவது தள்ளிவிட வேண்டியதுதான். பின்னால் இதனால் சிக்கல்கள் காத்திருக்கின்றன. ta involvement for me. தாய் கூட அவ்வப்போது வந்து போகிறது. அதன் வயிற்றுக் காம்புகளில் ஒன்றை இது கடித்துத் தொங்கியபடி குட்டியை இழுத்துக்கொண்டு தாய் கொஞ்சதுரம் ஓடி வெடுக்கென்று தன்னை விடுவித்துக்கொண்டு ஓடிவிடும். இது மறுபடியும் தன் விளையாட்டில் இறங்கிவிடும். அதை வயிற்றில் தூக்கிப் பிடிக்கிறேன். எங்கள் கண்கள் சந்திக்கின்றன. வெள்ளை உடலில், கழுத்திலிருந்து ஒடி முகம் முழுக்க வியாபித்த கறுப்பிலும் கறுப்பாய்ப் பதித்த பெரிய ஜபமணிகள் போன்ற விழிகளில் பொழியும் கனிவுஅந்த விழிகளில் ஏதேதோ பார்க்கிறேன். கடல்-நதிமூலம்ஜீவநதியின் மூலம்- வசனகவிதை ஏன் இத்தனை சின்னப் பிராணியுள் இத்தனை பெரிய அன்பைத் திணித்து அதை