பக்கம்:உதட்டில் உதடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திர ഥயிலே ! சென்று வரட்டுமா ?”
என்றன். “நல்லது” என்றள். சென்ற ன்.

அஞ்சான் சென்று ஐந்துநாள் ஆனது.
அஞ்சலை தூங்கியும் ஐந்துஇர வானது.
ஒருதினம் காலை ஒன்பதே கால்மணி.
பள்ளிச் செல்லும் பையன்கள் இருவர்
கன்னியா குமரிக் கடலில் பெரும்புயல்
வீசும் சேதியைப் பேசிக் கொண்டு .
போவதை, அந்தப் பேதை கேட்டு,

அவருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்ததோ”
என்று நினைத்தாள். நினைத்த உடனே,
அடிக்கடி அசையும் இமையில் வந்து
தொத்தி, கண்ணீர், முத்தாய் உதிர்ந்தது!

அழுத துளியும் பொழுது மாக
இருக்கும் போது, இவளுக் காக
கணவன் எழுதின கடிதம் வந்தது.
ஆவ லாக அதனைப் பிரித்தாள்:
”அஞ்சலை! எனது ஆசையின் உதவியே !
உன்னைப் பிரிந்த ஒருமா சமாக,
இரவு உலகம் இனிக்க வில்லை.
மனசு எல்லாம் மந்தம் ஆவுது.
கொத்தும் கிளிநான் குமரிக் கரையிலும்,
கொய்யாப் பழம்நீ கூரை வீட்டிலும்,
இருப்பதால் அல்லவா இந்தத் தொல்லை!
ஆகையி னலே தோகை மயிலே!
நாளே ராத்திரி நிச்சயம் வருகிறேன்”
என்று எழுதி இருப்பதை; வர்ணப்
பார்வை இரண்டு பார்க்க, மனதால்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/8&oldid=1067158" இலிருந்து மீள்விக்கப்பட்டது