பக்கம்:உதயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உதயம்

உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினுள் உன்தன்னைச் 

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.             28

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னேச் சேவித்துன்

பொற்ற மரையடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்தேநீ

குற்றேவல் எங்களேக் கொள்ளாமல் போகாது 

இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும். ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னேடு 

உற்ருேமே ஆவோம் உனக்கோம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.             29

வங்கக் கடல்கடைந்த மாதவனக் கேசவனேத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி 

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல்பட்டர்பிரான்கோைதசொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் 

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.               30


——————————————————————————————————————————————————————————— அல்லயன்ஸ் பிரஸ், மயிலாப்பூர், நெ. 109, ஜன்வரி, 1947

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/34&oldid=1201848" இலிருந்து மீள்விக்கப்பட்டது