பக்கம்:உத்தரகாண்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    121


சொல்லும் போதே ஜயந்திக்குக் கண்களில் குளம் கட்டுகிறது. இப்படியும் ஒரு பாவம் உண்டா என்று நெஞ்சு பதைக்கிறது.

“இவங்கல்லாம் புனாவில இருந்தாங்க. இவருக்கு இன்னொரு அண்ணன் இருக்கிறான். ஒரு தங்கச்சி அமெரிக்காவில் இருக்கிறா. அப்பா நடுவயசுல எறந்துட்டாரு போல. கஷ்டப்பட்டு பையங்களப் படிக்கவச்சி, கலியாணங்கார்த்தி செஞ்சிருக்காங்க. அம்மா கடோசி வருசங்கள்ள, பாரிசவாயு வந்து படுத்திட்டாளாம். இவளக் கலியாணம்னு கழிச்சி யார் வூட்டுக்கானும் அனுப்பிச்சிட்டா, மாமியாருக்கு ஆரு செய்யிறதுன்னு அண்ணிகாரியே வந்த எடமெல்லாம இதச்சொல்லித் தடுத்திட்டான்னு சொல்லுவாங்க. எங்கக்கா புனாவுல இருந்தா. அப்படி அவுக மூலமாத்தான் இந்த வீட்டில வச்சேன்... நானும் எல்லாப் பக்கமும் விசாரிச்சிட்டேன்... ஆச்சியம்மா, அரச புரசலாச் சொல்லிக்கிறாங்க. குரோம்பேட்டப் பக்கம் பத்து நா மின்ன ரயில்ல அடிபட்டு நசுங்கி ஒரு பொம்புள பொணம் இருந்திச்சாம். பரங்கிமல போலீசு டேசன்ல விசாரிச்சதுல, பெரியாசுபத்திரிக்கு அனுப்பிச்சி, பாடி கிடங்கில வச்சிருந்தாங்க. ஆரும் வரல. எரிச்சிட்டாங்கன்னு தெரியுது. ஆச்சிம்மா... வயிறே துடிக்கிது. வூட்ட சாவிபோட்டுத் தெறந்து, தேடின. அவண்ண அட்ரசுக்கு, டில்லிக்கு ஃபோன் போட, ஒண்ணும் தெரியல. தந்தி ஒண்ணு அனுப்பிருக்கிற. எந்தப் படுபாவி என்ன செய்தானோ, என்னேமா...”

நா ஒட்டிக் கொள்கிறது. உடலிலுள்ள கோடானு கோடி அணுக்களும் குலுங்கினாற் போல் இருக்கிறது. சுவரைப் பிடித்துக் கொண்டு ஒட்டிக் கொள்கிறாள்.

“ஆச்சி, காஞ்சிவரம் ரோட்டுல, அங்க ஒரு அம்பாள் கோயில் ஆசிரமம் வச்சிருக்காங்களாம், வாரீங்களா, போய் வரலாம்...” என்று கேட்டு குரல் ஒலிக்கிறது. அவள் போக வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/123&oldid=1049659" இலிருந்து மீள்விக்கப்பட்டது