பக்கம்:உத்திராயணம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷榜& வா. ச. ராமாமிருதம்

அம்மா. கிறுக்கன் ஒருத்தன் கதை எழுதினான்னு பழக்கத்திலில்லாத பேரைச் சூட்டினால் பேருக்கேத்த குணத்தையும் நாம் அனுபவிக்க வேண்டியதுதான் அடங் காப்பிடாரி, ஒரு அயிலாண்டம், எச்சுமி, வாலாம்பா, அல மேலுவிலே இருக்கிற பத்ரம், நிற்பயம், உங்கள் ஜனனி, சந்திரிகா சசிரேகாவில் கிடைக்கிறதா பாருங்கோ!'

本 率 忠

அம்மாவின் ஆர்க்யுமெண்டிலும் கொஞ்சம் விஷயம் இருக்கும் போலத்தான் தோணறது. ஏன் எனின், இத்தனை எதிர்ப்புக்கு எதிராய், அழுது, அழுச்சாட்டியம் ஆஹாத்யம், அடாவடி பண்ணி கைகேசி பண்ணி, ஜனனி பண்ணி, கோடை விடுமுறைக்கு அக்கா ஊருக்குப் போக வரம் வாங் கிட்டேன். ரெண்டுபேருக்கும் என்னைத் தனியா அனுப்ப அரை மனசுதான். எனக்குத் துணை வர அப்பாவுக்கு லீவு கிடைக்காது. ரயில் சார்ஜ், ரயில்காரனுக்குக் கொள்ளை கொடுக்க ஐவேஜ் இல்லை. அம்மாவுக்கு அக்காவைப் பத்தி நேர்த் தகவல் தெரிஞ்சுக்கணும்னு எண்ணம். நடுவில் மாற்றல் ஏதும் கிடையாது. இங்கு பெண்கள் வண்டியில் ஏற்றிவிட்டால் நேராக அங்கு போய் இறங்க வேண்டியது தான். ஸ்டேஷனுக்கு வந்து அத்திம்பேர் அழைச்சுண்டுப் போறார். மனசு சமாதானம் பண்ணிக்க இதுதான் வழி. பண்ணிக்க முடியாவிட்டால் இரண்டுபேரும் திண்டாடுங்கள். அமுத்திப் பொத்தி வெச்சு அடைகாக்கிற நாளெல்லாம் அந்தக்காலம்.

அழைத்துப்போக இரண்டுபேருமே வந்திருந்தனர். அஞ்சு வருடமென்ன, ஐம்பதானாலும் அக்காவை எங்கு, வேனுமானாலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். இப்போது கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் தான் என்னைப் பார்த்துச் சற்று திணறிவிட்டார்கள். எனக்கும் சர்ப்ரைஸ் பாக்கெட்"டாக விளங்கத்தானே விருப்பம்: