பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ. கோ. சண்முகம்

||||————————20

"காப்பி எக்ஸ்லண்ட்!
அரோமா என்னமா
இருக்கு பாத்தியா...?
இங்கெல்லாம் கூட
இப்படி
டிகிரி காஃபி கிடைக்குதே... உம்...!
சரி சரி-
நீ குடிச்சியா...?
என்னாப்பா, 'உம்'னு இருக்கே...?”


தலைவர்
அதட்டலாகக் கேட்டார்.!


"நம்பளை அவமானப் படுத்தி இருக்காங்க,
சும்மா விடக்கூடாது அண்ணே,
முதல்லே வண்டியே விட்டு இறங்கி
வாங்க, சொல்றேன்...!”


தலைவருக்கு
தன் தனிச் செயலருக்கு
ரொம்ப அன்னியோனியம்!


"அவமானமா, நம்பளையா?
என்னாப்பா இங்கே பதட்டம்?"


வியப்போடு இறங்கி
தனிச்செயலர் பின்னால் போனார்!