பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 ————————||||

உப்புமண்டித் தெரு



சுயக்கட்டுப்பாடும்
உடையவர்!

ஸ்டேட்ஸிலிருந்து
விடுமுறைக்கு
வீடு திரும்பியிருந்த
தனது மூன்றாவது
பிள்ளைக்காக
நடத்தப்பட்ட
அந்த விருந்தின்
'உணவுநிரல்' கூட
அவர் தயாரித்ததுதான்...!

அன்றைய 'சிறப்பு' களில்
ஆப்பிள் பாயசம்!
காய்கறி வடை
இப்படிப் பல...!

வழக்கம்போல -
'ருசி' பார்க்க
அவருடைய
'பாதியாள்'
பெரிய
எவர்ஸில்வர் டம்ளரில்
ஆப்பிள் பாயசமும்
தட்டு ஒன்றில்
காய்கறி வடை