பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை மீது காதல்

அறிஞர் ம.இலெ. தங்கப்பா கூறுவதுபோல:

“நாம் வயப்பட்டிருக்கும்போது நம்முள்ளிருக்கும் நல்லவை யெல்லாம் வெளிப்படுகின்றன அல்லவா? அதுபோலவே வாழ்க்கைமீது காதல் வயப்படுவோமானால் எப்பொழுதும் நாம் நல்லவர்களாகவே இருப்போம்”

“வாழ்க்கை மீது காதலோடு வாழுங்கள். அது ஒன்றே வாழ்தல்”

“உறவில் மட்டுமே வாழ்க்கை பொருளுடையதாகின்றது”

“அறிவாராய்ச்சியாளனாக இராதே, கருத்தளவில் வாழாதே எளிமையும் அன்பும் உடையவனாக இரு சுவர்களை இடித்தெறி, தற்காப்பைத் தகர்த்து அன்பு வெள்ளத்துள் சாய்ந்து விடு; முழுமையான நல்லியல்பில் உன்னை இழந்துவிடு”

இவ்வாறு வாழ்வதுதான் வாழ்க்கை. மக்களுக்கும் பொருள்களுக்கும் அடிமையாய் இருந்தால் - சார்ந்திருந்தால் அதனை விட்டுவிடுவதே உண்மையின் பேரின்பம். இவ்வாறிருந்தால் அன்புறவு நமக்கு மிகப்பெரிய உரிமையை - விட்டு விடுதலையாகி நிற்கும் பேருரிமையைத் தருகிறது.

தோழமை என்பது கிளர்ச்சி செய்வது; ஆகவே அன்புவாணன் என்பவன் கிளர்ச்சிக்காரன். அவன் எல்லாப் பழமைகளுக்கும் எதிரி. ஓட்டை ஒடிச்சலான - இயற்கைக்கு முரணான் மரபிற்கும் எதிரி. எல்லா இயக்கக் கோட்பாடு களுக்கும் எதிரி. அவன் விரும்புவன அன்பு - உண்மை -