பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

நாளைவரையில் பற்றான்றுரிமை எவர்க்கும் இல்லை ஆதலால் வேளை இன்றே சோர்ந்த நெஞ்சில் உவப்பூடின்பம் விளைத்திடு, பாளைவாயின் மது அருந்து பால்நிலாவில், பாங்கனே, நீள நிலவும் நிலையாய்ச் சுழலும் நிலாது நமது வாழ்வடா! இந்த ஆண்டின் வணிகர் சாத்தும் இமைப்பிற் கடந்து சென்றிடும் இன்றே நீயும் இன்பப் பொழுதைப் பற்றிக் கொள்வாய் இளைஞனே, துன்பம் ஏனோ? நண்பர்க்காக நாளைக் கவலை ஏனடா? இன்ப மதுவின் கிண்ணம் கொள்க இரவும் விரைந்து கழியுமே.

வெளிரும் இருளின் காலைப் போதில் சேவல் கூவல் ஏனென ஒளிவு தன்னை அறிகுவாயோ? உனது வாழ்வில் ஒர்இராக் கழிந்துவிட்ட தென்றுகாட்டும் கண்ணாடிதான்் உணர்கென விழிப்புணர்வை விரித்துக் காட்டும், நீயோ கருத்தில் கொள்கிறாய்.

இன்இனிய பெண்அணங்கே, எழுந்திராய் விடிந்தது, நின்று தாழ்ந்து மது உறிஞ்சு, யாழை மீட்டிப் பாடிடு; என்றும் எந்த உயிரும் இந்த உலகில் நிலைப்பதில்லையே சென்றுபோன மாந்தர் எவரும் திரும்ப வந்ததில்லையே. 115

68 த கோவேந்தன்