பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

கடந்த கால உலகக் கவலை விட்டு நீயும் எழுந்திடு தொடர்ந்திருக்கும், ஒருகணத்தைக் களிப்பில் ஆழ்ந்து துய்த்திடு, நடப்பியல்பில் உலகினுக்குப் பற்றின் சாயல் இருக்குமேல் உனக்குன் முறையும் வருவதில்லை, பிறர்க்கு வந்த தொப்பவே.

ஆழங் காண முடியா உலகில் அகமகிழ்ந்து மதுவை உண், சூழு நின்று அருந்துவோர்க்குச் சுழன்று மாறும் மதுக்கலன், ஏலவாய்ப்புக் கிட்டும் போதில் முணுமுணுப்பும் எதற்கடா? ஆழி போலக் கலயம் சுற்றும் அனைவர் தாமும் சுவைக்கவே. 125 கற்றறிந்தார் கூட்டத்திருந்து சுழற்றிக் கொள்ளல் நல்லது, சிற்பம் ஒத்த மகளிர் கூந்தல் வலையில் சிக்கல் சிறப்புக் காண், கற்பிளக்கும் இளமைக் குருதி காய்ந்து வற்றிப்போகுமுன், பொற்கலத்து மதுவை உண்டு, பொலிந்திருத்தல் நல்லதாம்.

காலம் தந்த கவலை கொண்டு குந்தி இருக்கும் ஒருவர்க்குக் கால நாள்கள் கசப்பைத் தந்து வெறுத்தொதுக்கித் தள்ளிடும், கோல வண்ணக் குவளை யாவும் குன்றில் மோதி நொறுங்குமுன் சாலப் பாடும் யாழிற்கேற்பச் சலிப்பிலாமல் குடித்திடு.

த. கோவேந்தன் ן 7