பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e-wž*wirw srpend_@so*álogpo

பொன்றி அழியுதென்றன் நெஞ்சம் பொங்கும் மதுவைக் கையில் தா, கண்முன் மறையும் இந்த வாழ்க்கை, இதனின் தன்மை கொண்டதாம் நன்னலஞ்சேர் இளமைத் தீயோ தண்ணிர் ஆகும் விழித்திரு. பின்னர் பேற்றின் விழிப்பு நிலையோ பேசும் இறப்பாய் ஆகுமே.

மது அருந்து மது அருந்து இதுவே நிலைத்த வாழ்க்கையாம்; இது உனக்கிங்கு இளமை தருவது அனைத்துப் பேறும் தந்திடும்; மதுமலர்கள் நண்பர் கூடி மதுவருந்தக் காலமாம் மது மகிழ்க, இந் நொடிதான்் முழுதும் வாழ்க்கை ஆகுமாம்.

மதுவை உற்ற நேயனாக்கு, மன்னன் அதியன் நாடிது, புதுமை யாழின் இசையைக் கேள்நீ மன்னன் வழுதி பாட்டிது, இதுவரைக்கும் இருந்தொழித்த எண்ணிலாரை மறந்திடு, மதுகையோடும் இன்று வாழ்வாய் மகிழ்ச்சி வாழ்வின் நோக்கிதே!

இன்றே உண்டு, நாளை உனது பிடிப்பில் இல்லை என்றறி, நன்று என்று அதனை எண்ணில் உள்ளம் நலிவதுதான்் மிஞ்சுமே. உன்தன் உள்ளம் விழித்திருப்பின் உள்ள பொழுதை விணிடேல் இன்றை வாழ்க்கை நாளை தொடரும் என்று கண்டார் யாரடா? 135

74 - த. கோவேந்தன்