பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

“ஜாதகக் கட்டத்தைப் போட்டு வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் முனு முணுத்து அசைபோடும் கழுதை போன்ற அந்த முடர்களின் தலைவன் சிதி அகமது அவனைப் போல் நான் ஏன் ஆகவேண்டும்?” என்று ஆத்திரமாகப் பேசினான் உமார்.

அவனுக்கு சிதி அகமதின் பெயரும் பிடிக்கவில்லை; சோதிடத்தில் நம்பிக்கையும் இல்லை என்பதை யாஸ்மி புரிந்து கொண்டாள். ஆனால் உமார் என்ன செய்ய எண்ணுகிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை, காலத்தையும் நேரத்தையும் அளந்து கணக்கிடப் போகிறானாம்; கதிரவன் உதித்தால் காலை தோன்றுகிறது ஐந்து வேளைத் தொழுகையும் முடிந்து ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டால், இரவு வந்து விடுகிறது. மாதங்களைக் கணக்கிட நிலவு இருக்கிறது. வளர்பிறை, தேய்பிறை இரண்டும் சேர்ந்தால் ஒரு மாதம். இதுதான் கால அளவைப்பற்றி யாஸ்மி கண்டு வைத்திருந்த முடிவு.

ஆனால், உமாருக்கு மாதங்களைக் கணக்கிடும் பிறைக் கணக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஓர் ஆண்டில் பல மணி நேரங்கள் விடுபட்டுப் போகின்றன. ஏன் அப்படிப் பல மணிகளை நாம் இழக்க வேண்டும்? நிலவு ஒழுங்காக மணி காண்பிக்காவிட்டால், அதை விட்டு விட்டு வேறு வழி தேடக்கூடாதா என்ன? சரியான ஆண்டுக்கணக்கையுண்டாக்க வேண்டும் என்பது உமாரின் இலட்சியமாக இருந்தது.

யாஸ்மி அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள். அவள் உள்ளத்தின் உள்ளே ஓர் கற்பனைகனவு உருவாகிக் கொண்டிருந்தது. உமார் ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால், யாஸ்மியிடம் தன் அன்பைச் செலுத்துவானேயானால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவனுடைய கூடம் முழுவதும் கூட்டிப்பெருக்கி, எல்லாச் சாமான்களையும் தூசி துடைத்து ஒழுங்காக வைத்து அவனுடைய ஆடைகளைத் துவைத்துக் காயப்போட்டு அவனுடைய கால் மிதியடிகளின் மேல் பகுதியில் பூ வேலை செய்து - ஆகா; அன்று முதலே அவனுக்கு அவளால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டு, அவன் கூடவே அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து