பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

ஓடினாள். பதில் பேசாத அந்தப் பெண், அற்புதமாக மாறி விட்டாள். அவள் இப்பொழுது விலைக்கு வாங்கப்பட்ட அடிமையாக இல்லை. உமாரின் கடுகடுத்த முகத்தைக் கண்டு கலங்கும் நிலையில் இல்லை. அவனையே ஆட்டிப் படைக்கும் அன்பரசி ஆகிவிட்டாள். ஒடிக் கொண்டிருந்த உமாரின் கைப்பிடியில் ஒரு தடவை எதிர்பாராமல் அவள் சிக்கிக்கொண்டாள். அவனுடைய கைகள் அவளுடைய நெஞ்சு மேட்டின் பஞ்சு போன்ற இடத்திலே பட்டபோது சிட்டுக்குருவி போல பறந்து போய் விட்டாள். தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிய அவள், காலில் எதுவும் அணியாமல் போனதால் எந்தப் பக்கம் போனாளென்றே தெரியவில்லை. முத்தமிட முயன்ற உமாருக்கு முத்தமிட வேண்டுமென்ற எண்ணம் மறந்து போய் விட்டது. இப்பொழுது அவளைப் பிடிக்கவேண்டும் என்ற மனநிலையே இருந்தது. அவளைத் தேடி இருட்டிலே விரட்டிக் கொண்டு அவன் ஓட ஓட அவன் நரம்புகளிலே ஓடும் இரத்தமும் வேகமாக ஓடத் தொடங்கியது.

அயிஷா போனதிசை தெரியாமல், சிறிதுநேரம் நின்றான். சற்று தூரத்தில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. ஆவலுடன் அந்த திசையில் பாய்ந்தவன் ஒரு மரத்தின் மீது முட்டிக் கொண்டான். மறுபடி கேலியான அவளுடைய சிரிப்பொலியைக் கேட்டு, அவன் ஓசைப்படாமல் அவளை நோக்கி விரித்த கைகளுடன் சென்றான். அவள் பாய்ந்து தப்புவதற்காக முயன்றபொழுது அவனுடைய விரித்த இரு கைகளுக்கிடையேயும், வகையாகச் சிக்கிக்கொண்டாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்வதற்காகத் திமிறினாள். ஆனால் வலிமை மிகுந்த அவனிடம் அவள் அடங்கிப்போக நேர்ந்தது. அவளை இறுக்கியணைத்தபடியே உதட்டுடன் உதட்டைப் பொருத்தினாள். கதகதப்பான அவளுடைய உதடுகள் அவனுடைய உதடுகளில் அழுந்திக் கொண்டன. அவளுடைய விரிந்த கூந்தல் அவன் தோளிலும் மார்பிலும் புரண்டது. அவளை அப்படியே தூக்கி மெதுவாகத் தரையில் படுக்க வைத்தான். அவள் அசையவில்லை. எழுந்து தப்பித்து ஓடவில்லை. பேச்சு மூச்சில்லாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கிடந்தாள். அவள் உள்ளத்துக்குள்ளே எழுந்து எரிந்துகொண்டிருந்த ஆசைத்தீ, அவளை மீறிக் கொழுந்துவிட்டெரிய