பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

வாரம் முடிவதற்குள்ளே நான் எப்படியாவது தப்பிச்செல்ல வழிபார்க்க வேண்டும்” என்று உமார் முடிவு செய்தான்.

இந்த முடிவுக்கு வந்த பிறகு, அழகு மிகுந்த ஸோயியைப்பற்றி நினைக்கும்போது அவளை இழக்க வேண்டியிருக்கிறதே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.


38. பாடும் புறா பறந்துவிட்டது!

தன் அறிவிலே ஒருவிதமான மயக்க நிலையை ஏற்படுத்திய மருந்து எது என்பதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதே முதல் வேலை என்று உமார் தீர்மானித்துக் கொண்டான். அறிவைக் குழப்பித் தொடர்ந்து பல காட்சிகளைத் தோற்றுவித்துத் தன்னை ஏமாற்றுவதற்கு ஹாஸான் உபயோகித்த பொருள் மதுவிலே மட்டும் கலக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்தான். மதுவின் தன்மையை உணர்ந்த அவன், அதை நன்கு தெரிந்து கொண்டான். மதுவிலே கலக்கப்பட்டிருந்ததை விட அதிகமான காட்டமுள்ள பொருள் ஒன்றுதான் தன் மூளையைக் குழப்பியிருக்க வேண்டும். அது கணப்பிலிருந்து வந்த புகையிலே கலந்திருக்க வேண்டும். தான் குடிக்கும் மதுக்கோப்பைகளிலும் கலந்திருக்க வேண்டும். அதையகற்றினால்தான் தான் தன் உணர்வோடு இருக்கமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டான்.

கணப்பை அகற்றுவது மிக எளிது. தன் வேலைகளைச் செய்யவரும் அடிமையிடம், கோபமாயிருப்பது போல் நடந்து, இனிமேல் இந்த அறைக்குள்ளே கணப்பை வைக்காதே என்று கூச்சலிட்டுக் கடிந்து கொண்டால் போதும். ஆனால் மது வேண்டாம் என்று கூறினால் அந்த மயக்க மருந்தை வேறு முறையிலே உபயோகிக்க முயற்சி நடக்கும். மேலும் நம்மைப்பற்றி மிக எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கி விடுவார்கள், தான் அறியாமலே தன்னை உளவு பார்க்கிறார்களே அவர்கள், தன்னை நம்பவேண்டும். தினந்தோறும் தான் மது குடிப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளவேண்டும். ஆனால், தான் மதுவைக் குடிக்கக்கூடாது. இதற்கு என்னவழி? வேலைக்காரன் தினமும் கோப்பையிலே