பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. பள்ளநூலகத் தலைவர்


'ஒரு பள்ளிநூலகத்தின் உயிர் அதன் தலைவராவார். நூலகத்தின் வாழ்வே அவர் கையில்தான் உள்ளது என்னலாம். நூல்களின் தரம், அவற்றைப் பொறுக்கி வாங்கும் முறை, வாங்கியவற்றை அடுக்கும் முறை, அடுக்கிய நூல்களை எடுத்தளிக்கும் முறை ஆகியவையெல்லாம் நூலகத்தலைவருக்கே தெரியும். பள்ளியிற் படிக்கும் மாணவர்தம் மனப்பாங்கினை நன்கறிந்து அதற்கேற்றவாறு நூலகம் அமைக்கும் ஆசிரியரும் அவரே. பள்ளியில் நடக்கும் பணி பலவற்றிலும் முக்கியப் பங்கேற்று வெற்றியுடன் நடத்திக் கொடுப்பவரும் அவரே.'

“இத்தகைய நூலகத்தலைவரையே பள்ளியாளர்கள் தத்தம் நூலகங்களுக்கு அதிகாரியாக்க வேண்டும். அதனல், நூலகத் தலைவராகப் போவோர் நூலகத்தலைவராக மட்டுமின்றி ஒரு சிறந்த கல்வித் தலைவராகவும், கலை ஞராகவும் இருக்க வேண்டும். அதனால், நூலகத்தலைவர் பிற பாடங்களோடு தொடர்பும், பாடத்திட்டம் பற்றிய அறிவும், எந்தெந்தப் பாடத்துக்கு எந்தெந்த நூலெலாம் தேவை என்பது பற்றிய குறிப்பும் தெரிந்த ஒருவராக விளங்குதல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியின் நூலகப்படிப்பு என்பது நூலகப்படிப்பின் பிரிவுகளுள் தனிச்சிறப்பும் தலைமையும் உடைய ஒரு பிரிவு என்பதை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்ளவேண்டும். ஆசிரியப் பயிற்சியும் நூலகப் பயிற்சியும் ஒன்றே; நூலகத்துக்கெனத் தனியான பயிற்சி தேவையில்லை என்று எண்ணுதல் அறியாமை. ஆசிரியப் பயிற்சி முடித்து வெளிவரும் ஒருவர் உடனே நூலகத்தை எடுத்து நடத்திவிட முடியாது. ஒராசிரியர் நூலகப் பொறுப்பை ஏற்கும்முன்பு குறைந்த அளவு ஓராண்டாவது தனியே அவர் நூலகப் படிப்பினைப் படித்தல் வேண்டும். ஒராசிரியர் பாதி நேரமாவது நூலகத்தலைவராகப் பணியாற்ற வேண்டுமானல்,