நூலக ஆட்சி
65
அட்டையில் (Card form) பதியும் முறை முடிவு செய்யப்பட்டுப் பழக்கத்தில் உள்ளது. நூலைப்பற்றிய முக்கிய விவரங்கள் அட்டவணை அட்டைகளில் பதியப்பட வேண்டும். வகைப்படுத்திய எண், நூல் எண் இவற்றின்மூலம் நூலின் இருப்பிடத்தை எளிதில் அறியலாம்: நூலே இருப்பிடத்தில் எளிதில் சேர்க்கவும் செய்யலாம்.
915.4 வகைப்படுத்திய எண் 1 - 圖 - N.36 நூல் எண் | குறிப்பெண் ஆசிரியர் இருவகைப்படுவர். மேலை நாட்டு ஆசிரியராயின் அவருக்குப் பட்டப் பெயர் இருக்கும். கீழை நாட்டு ஆசிரியர்க்குப் பட்டப்பெயர் இருத்தல் அரிது. கூட்டாசிரியர் என்பவரைச் சேர்த்தால் ஆசிரியர் மூவகைப்படுவர்.
மேலே நாட்டு ஆசிரியரைப் பதியும் முறை:
பெயர் : கோலன். ஏ. சி.
பட்டப்பெயர் : கோலன்.
முதலெழுத்துக்கள் : ஏ. சி.
கீழை நாட்டு ஆசிரியரைப் பதியும் முறை:
பெயர் : சுப்பிரமணியம்
பட்டப்பெயர் : வடதலைசேரி
சோமசுந்தர பாரதியார்:-
பெயர்: சோமசுந்தரம்
குடும்பப் பெயர் : பாரதியார்
மேலை நாட்டு ஆசிரியர் பாணியில் கீழை நாட்டு ஆசிரியர்: