பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

விடணும்னு புலம்பராளாம். பிள்ளையானால், 'வரச்சொல்லி எழுதியாச்சு, வந்தால் வரட்டும். இனி அவன் வீட்டுப் படி யேறி பெண்ணை அழைக்க மாட்டேன்' என்கிறானாம். பெண் வாழ்வு பாழாகப் படாது வாலு! பெண்ணைக் கூட்டிண்டு கிளம்பு இப்பவே! பகவானாப் பார்த்து,உன் அகத்துக்காரரை வெளியூருக்கு அனுப்பிச்சிருக்கார்! பின்னாடி நடப்பது நடக்கட்டும். சாவைத் தள்ளப்படாது என்கிறசாக்கு இருக் கிறது, பார்த்துக்கலாம். சட்டுனு கிளம்பு. அரை மணி சாவகாசம்தான் இருக்கு வண்டிக்கி. பாவம், உசிரு இருக் கும்போது மாட்டுப்பெண் முகத்தைப் பார்க்கட்டும், தர்முக்கும் நல்லகாலம் பிறக்கட்டும்... என்று துரிதப்படுத்தினாள் கோகிலம். கும்பகோணம் புதுத்தெரு கூரை வீடொன்றில் கயிற்றுக் கட்டலில் அசைவற்றுக் கிடந்தாள் ஞானாம்பாள். களை யிழந்தமுகத்துடன் அருகில் உட்கார்ந்து விசிறிக் கொண் டிருந்தான் சுவாமி நாதன்! கவலை மண்டிய உள்ளத்தோடு தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் நாகசாமி. தட தடவென்று வீட்டு வாசலில் வந்து நின்ற குதிரை வண்டியிலிருந்து வாலாம்பாளும் தர்முவும் இறங்கி பறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தார்கள். சுவாமிநாதன் திடுக்கிட்டு விழித்தான்! கவலையும், திகிலும், கலந்த குரலில் 'அம்மா' என்று குரல் நடுங்க அழைத்தவாறு மாமியாரின் முகத்தோடு தனது முகத்தைப் பதித்துக் கேவினாள் தர்மு. 'யாரு சாமா, யாரு...' என்று முனகினாள் ஞானாம்பாள். "நான் தான் அம்மா, உங்கள் தர்மு. கண்ணைத் திறந்து பாருங்கள்" என்றாள் குரல் தழு தழுக்க. தர்முவா, ஏதுக்கு இப்படி பொய் சொல்றே சாமா...?" 66