பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பதிப்புரை மறுமலர்ச்சி இலக்கியத்தில் மணிக்கொடி யுகம் ஒரு முக்யமான காலமாகும். அக்காலத்தில்தான் பல மணியான இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பலர் இலக்கியப் பணியில் ஈடுபடத் தொடங்கியதும் அந்தக் காலத்தில் தான். சிறு கதை மன்னர் என்று அழைக்கப்படும், கு. ப. ரா. (கு.ப. ராஜகோபாலன்) புதுமைப்பித்தன், (சோ.விருத்தாசலம்) நா. பிச்சமூர்த்தி, சிட்டி, (பெ. கோ. சுந்தர ராஜன்) ஆகியோருடன் பல பெண்மணிகளும் மணிக்கொடி தோற்றுவித்த மணிகள் தாம், சகோதரர் கு.ப.ரா.வைப் பின்பற்றி கு. ப. சேது அம்மாளும் அந்தக் காலத்தில்தான் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். உள்ளத்தை உருக்கும் கதைகளை கு. ப. சேது அம்மாள் அவர்கள் எழுதி வந்தார். அவர்களைப் பின்பற்றியே பல பெண்மணிகள் இலக்கியப் பணியில் ஈடுபடலாயினர். சேது அம்மாள் அவர்களின் கதைகள் எல்லாமே உயிர்த்துடிப்பு உள்ளவை. படிப்பவர் மனதை உருக்கி