பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

43


அமினோ அமிலங்களினின்றும் புரதங்களின் அணுக்கூட்டுகள் தோன்றுவது எளிதல்ல. அவை தோன்ற மிகுந்த சக்தி கொடுக்கப்பட வேண்டும். 3000 காலரி வரைக்கும் உஷ்ணம் கொடுக்கப்பட்டால்தான் இவ்விணைப்பு உண்டாகும். சோதனைச்சாலையில் தேவையான சக்தியைப் பலவகைகளில் கொடுக்க முடியும். அமினோஅமிலங்களைச்சாதாரண உஷ்ண நிலையில் கரைத்து வைத்தால் அவை ஒன்றாக இணைவதில்லை. ஆயினும் கடந்த சில வருஷங்களில் புரதங்களை செயற்கையில் செய்யும் முயற்சி சிறிதளவு வெற்றிபெற்றிருக்கிறது. அமினோ அமிலங்களை சரியானபடி தேர்ந்தெடுத்துக் கொண்டால், அவை ஒன்றுசேரத் தேவையான சக்தியைக் குறைக்கலாம். லெனின் கிராடில், பேராசிரியர் S.E. ப்ரெஸ்லர் நடத்திய சோதனைகள் முக்கியமானவை. அமினோ அமிலங்களைத் தண்ணீரில் கரைத்து காற்றின் அழுத்தத்தைவிட ஆயிரம் மடங்கு அழுத்தத்தில் அவற்றைச் சேர்க்கையடைய செய்தார். அமினோ அமிலங்களையும், புரதங்கள் சிதைவதால் கிடைக்கும் பொருள்களையும் இவ்வாறு அழுத்தத்துக்குட்படுத்தி உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ள புரதங்களை தயாரித்தார். இச்சோதனைகள் புரதங்களையும், புரதப் பொருள்களையும் செயற்கை முறையில் தயாரிப்பது சாத்திய மென்பதை உறுதிப்படுத்தின. அதுமட்டுமல்ல; பூமியில் கடல்களுக்கு அடியில் மிகுந்த அழுத்தமுள்ள பகுதிகளில் அமினோ அமிலங்கள், புரதங்களாக மாறியிருக்க முடியும் என்பதையும் காட்டுகின்றன. தரை தோன்றிய காலத்தில் புரதப் பொருள்கள் பூமியில் உண்டாயின என்பதை நவீன ரசாயனம் தெளிவாக்குகிறது. அப்புரதப் பொருள்கள், தற்காலப் புரதப் பொருள்களல்ல என்பது உண்மையே. ஆயினும் அவை இரண்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையும் உண்டு. இன்றைய புரதப் பொருள்களைப் போலவே அவை அமினோ அமிலங்களின் இணைப்