பக்கம்:உயிரில் கலந்தது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


காயம் ஏதும் படவில்லை, காயம்தான் பொய் என் கிறார்களே!...”

மாடியில் அமர்ந்திருந்த ஞானசீலன்,கீழ்த்தளத்தினின்றும் படி தாண்டி வந்த குரல்கேட்டுக் கீழே இறங்கி வந்த சமயம் அங்கே முதிர்ந்துபழுத்தவர் ஒருவர் பெரியவர் என்ற பட்டப் பெயர் துலங்க, கூடத்தில் குந்தியிருக்கக் கண்டார். வணக் கத்திற்கு உகந்தவரை வணங்கினர் ஞானசீலன். ஒரு சமயம், சாது அச்சுக்கூடத்தில் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர் களைச் சந்தித்ததையும், அவருடன் கூட இருந்த டாக்டர். மு. வ. அவர்களைப் பழக்கப்படுத்திக் கொண்டதையும் அவர் இப்பொழுது நினைவு கூர்ந்தார். ஒன்றின் நினைவில் ஒன்பது நினைவுகள் கிளைவிட்டுப் படர்வது நியாயமே! -

“உட்காருங்கள். உங்களை நான் ஏற்கனவே அறிந்தவன் என்ற முறையில்தான் இப்பொழுது நான் உங்களைப் பார்த்துப் போக வந்திருக்கிறேன்!” -

  • சந்தோஷம், ஐயா!’

பெரியவர் தம் பெயர் ‘மாசிலாமணி,” என்றார், மாசிலா மணி அமர்ந்திருந்த பெஞ்சியில் ஞானசீலனும் உட்கார்ந்தார். எழுத்தாளனின் முகத்தைப் பிறர் நேருக்குநேரே அறியாமற் போனலும், அவனது அகத்தை அறிந்துகொண்டு விடுகிறார் கள் உலகத்தவர்கள். இந்த அளவில் எழுத்தாளன் என்ற கெளரவம் புகழ்ச்சிக் குரியதே யன்றாே!...இதை நிரூபிப்பதற்கு இப்போது வந்திருக்கக்கூடிய இந்த மூத்தோர் விஜயமே போதுமே!’

வந்தாள் கோசலை அம்மாள். ‘தம்பி, இவங்க நமக்குத் துரத்துச் சொந்தம் சொந்த ஊர் திருவாரூர். நான் ஒரு நான் உன்னிடம் சொல்லியிருக்கேன் பார், கமலாட்சி என்று. அது இவங்க பெண்தாளுக்கும்” என்று முன்னுரை வைத்தாள். - . - -

    • * *

ஒப்புக்குச் சிரிப்பை வெளிக்காட்டினர் ஞானசீலன்.