பக்கம்:உயிரில் கலந்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


சில கணப்பொழுதிற்கு முன், இதே கடிதத்தைப் படித்த பொழுது, தோன்றாத சில அதிசயங்களே இப்பொழுது அக்கடிதத்தின் வாயிலாகக் கண்டார் அவர். இலக்கிய நயம் - சொட்டச் சொட்ட எழுதியிருக்கிருயே வாணி?... அப்படி யென்றால், தேர்ந்த ஞானம் படைத்தவளாகத்தான் இருக்க வேண்டும்! அவளது அறிவாழத்தைக் கண்டுதான் வாணி என்று அவளுக்குப் பெயர் வைத்திருப்பார்கள் போலும்!...”

’ஏ கிளாஸ் கச்சேரியில் நிரம்பி வழியும் மகிழ்ச்சிப் பெருக்கு அவருள் நிரம்பி வழிந்தது.

ஏவிய மனமே, ஏவப்பட்ட சாகசத்தைக் கண்டு மகிழ்த் தது. வாணியிடம் ‘நீ என்னைக் காதலிக்கிருயா?’ என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவள் புன்னகைப் பூவை உதிர்த்துவிட்டு, ஓடி விட்டாளே!. அவள் மெளனம் அவளது சம்மதத்துக்கு ஆதாரம்தானே? அப்படியென்றால், என் மனம், என் மகிழ்ச்சித் திளைப்பு, என் மவுனம் எதற்கு ஆதாரம்? எதற்கு அடையாளம்? எதற்கு அத்தாட்சி?...”

யதார்த்த வாழ்க்கைக்கு உட்பட்ட மனித மனத்தின் பலஹீனங்களுக்குப் பிரதிநிதித்வம் பூண்டு பேசியது உள்மனம் அதற்குத் தாளம் போடும் வகையில் எண்ணங்கள் தொடுத்து நின்றான். தொடுத்து நின்ற மாரன் கனே'யின் வினயச் சிரிப்பு வேடிக்கை கோலம் ஏந்தி, பகைப்புலனில் பதவிசாகச் சிரித்துக் கொண்டிருந்ததை ஞானசீலனின் இலக்கிய மனம் மட்டுமே தொட்டும் தொடாமலும் கண்டது: கணித்தது:

அவரால் என்ன செய்ய முடியும்: காத்ல் எனும் நோய் உடனடியாகத் தீர்ந்துபோகக் கூடியதல்லவே? - . * * 。。 「

மீண்டும் நெருப்புப் புகைந்தது. அதாவது, அடுத்த சிகரெட் தீர்ந்தது என்று அர்த்தம்.

வாணியின் கேள்விக்கு அர்த்தம் புரிந்து விட்டது எனக்கு. அதுபோல, என்னுடைய வினவுக்கும் அவளுக்குப் பொருள் புரிந்திருக்கத்தானே வேண்டும்? , .