பக்கம்:உயிரில் கலந்தது.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


விருந்த காரிலிருந்து அதிபர் இறங்கும் நேரத்தில், ஞானசீலன்

சைக்கிள் ரிக்ஷாவைவிட்டு இறங்கினர்.

மாடிக்குச் சென்றதும் குசலம் பரிமாறப்பட்டது.

அலுவலகத் தகவல்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

காலே பத்துமணிப்பொழுதுக்குப்பின் கடிகாரம் அத்துணை துரித கதியுடன் செல்ல எங்கே கற்றுக் கொண்டதோ?

மத்தியான்னச் சாப்பாட்டுக்கு மணி அடித்தார்கள்.

பையன் சாப்பாட்டுப் பாத்திரத்துடன் ஞானசீலனுக்கு உணவு கொணரப்புறப்பட்டான்.

அது சமயம் அங்கு வந்த முதலாளி ஞானசீலனை அழைத்து, “இன்று உங்களுக்கு நம் பங்களாவில் சாப்பாடு. சில முக்கியமான விஷயங்கள் உங்களுடன் பேசவேண்டும்,” என்று சொல்லி நிறுத்தினர்.

‘சரி என்று தலையசைத்த ஞானசீலனுக்கு உள்ளுற ஏனே ஒரு வகைப்பட்ட கலக்கமும், இனம் பகுத்துணர வாய்க்காத இன்பமும் மாறி மாறித் தோன்றலாயின!

10. சிரிக்கின்ற வரம்:

மயிலாப்பூரில் ஞானலேனின் உரிமையாளரின் பங்களா இருந்தது.

அந்தப் பங்களாவை அடைந்த ஞானசீலன், பங்களாவின் “பார்வையாளர் அறை'யில் கிடந்த சோபாவில் அமர்ந்தார். நான்கைந்து வகைப் பத்திரிகைகளையும் புரட்டின்போது, அவ ருக்கு தி. மு.க. தரும் தலைவலிதான் மிஞ்சியது. அண்ணு பேசுகிறார், அண்ணு பேசுகிறார் என்று கொட்டை எழுத்தில் அவர்கள் பத்திரிகைகளில் எல்லாம் ஒரே மாதிரியாகப் போடு