பக்கம்:உயிரில் கலந்தது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஞானசீலனோ உள்ளத்தால் அழுதார். உள்ளத்தால் வாழ்வு நடத்தி ஒத்திகை பார்த்த பிறகே, உடலால் வாழ்வு நடக்க வேண்டும் என்று கொண்டிருந்த ஒரு புதிய தெளிந்த, தத்துவத்தைச் செயல் முறையில் கொண்டுவர ஆசைப்பட்டவர் அவர். இப்பொழுது அந்தத் தவத்தின்புனிதம், கமலாட்சியைப்பற்றி கணப்பொழுதின் சலனம் காரணமாகக் களங்கம் அடைந்துவிட்டிருக்குமோ என்று பதை பதைத்தார்.வாழ்வின் ஆதரிசத்தைக் குறியாக்கி வழிப்பயணத்தைத் தொடந்து வரும் அவர், மாண்புமிக்க ஒரு பொக்கிஷத்தை, மனச்சலனத்திற்குக் கொத்தடிமையாகி, எங்கேனும் இழந்துவிட நேரிட்டுவிடுமோ என்று தவியாகத் தவித்தார். கண்கள் குளமாயின. ‘என் வாணிக்குத் துரோகம் செய்துவிட்டேனோ? ஊஹும், இல்லை! மனிதவாழ்விலே சாதாரனமாகக் காணக் கொடுத்து வைக்காத அந்தத் தெய்வீக சௌத்தர்யத்தைத் தரிசித்ததும், என்னை நான் இழந்துவிட்டேன். எல்லாம் என்னுள்ளே வளர்ந்திருக்கும் கலையார்வத்தின் விரிவுதான் கமலாட்சியின் படத்தைப் பார்த்த போது கூட, என்னுள் வாழ்ந்த வாணியைத்தானே நான் நாளும் பொழுதும் பார்த்துக்கொண்டிருந்தேன்! ஆம்; மெய்தான். நானே என் வாணியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு அவளை என் மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன்.'

மண்டை வலி கூடியது:

நெஞ்சுக் கனம் கம்மிப்படவில்லை.

சாய்வு நாற்காலியில் நன்றாக முதுகைச் சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டி, ‘அம்மாடி’ என்று ஒரு முறை கொட்டாவி விட்டு விட்டு, கண்களை மூடிய பொழுதில், மானசீகமாகத் தோன்றிய வாணியின் அழகை அன்வயப்படுத்தி ரசித்தார் அவர். நரம்புகள் புடைத்தன. உடலில் இனம் மட்டுப்படாத ஊறல் ஏற்பட்டது. உடம்பு சுட்டது.

‘வாணியின் வாழ்வில் ஏதோ சில உண்மையில் இருக்க வேண்டும். அவற்றை சந்தர்ப்பம் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்’, என்று சங்கற்பம் எடுத்திருந்த அவர்,வாளிப்பான