பக்கம்:உயிரில் கலந்தது.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


‘பசியின் உண்மையையும் ரகசியத்தையும் உணர்ந்தவன் தான் நானும், இந்த ஐந்து ரூபாய். இப்போதைக்கு இதை வைத்துக் கொள். மறுபடியும் திரும்பிவந்து உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். எங்கள் வாட்ஜில் வேலை தருகிறேன். நீ இங்கேயே, இந்தப் பெட்டிக்கடை வாச விலேயே நில்,” என்று:மீண்டார்.

தவசீலி, இரண்டு கைகளாலும் ஏந்திய ரூபாய் நோட்டுக் களைக் கண்டு, மாலை மாலையாகக் கண்ணிர் பெருக்கிளுள் துயரத்தில் மட்டும்தான் கண்ணிர் வருமா? ஆனந்தத்திலும் தான் வருகிறது:

‘ஐயா, என் நெஞ்சில் இடம்பெற்ற தெய்வம் நீங்கள்:” என்று உணர்ச்சி வசப்பட்டு, மெய்ம்மறந்த நிலையில், கண்ணிரும் கம்பலையுமாகச் சொன்னுள் தவசீலி.

தவசீலியின் தந்தையை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தபோது, தவசீலியிடம் அவள் விருப்பப்படி, சிறிகதிை உத்திகளையும் லட்சணங்களையும் உதாரணம் காட்டி விவரித்தார்.

“என் நெஞ்சை உங்களிடம் ஒருநாள் திறந்து காட்டினல், தான் ஸார், எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படும்; உங்களே என் ஆயுள் பூராவும் மறக்க மாட்டேன், ஸார்.ஆமாம், லாச். உங்களை நான் என் ஆயுள் பூராவும் மறக்கவே மாட்டேன் ஸ்ார். என்னவோ, தெய்வம்தான் இப்படிச் சொல்லும்படி கட்டளை இடுகிறது...ஆமாம், ஸார்!...”

தவசீலிய்ைப் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டனவே?...ஏன் இன்றைக்கென்று தவசீலி ஞாபகம் அடிக்கடி உண்டாகிறது?

தன்னுரிவேர் போட்ட.தண்ணீரை ஒரு மடக்கு அருந்தி விட்டு வந்து குந்தினர் ஞானசீலன்.

திரை முதலாளிக்கு அன்புத்திறை செலுத்தி மறுமொழி அனுப்பப்பட்டது. -