பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சோதனைக்... 136 நிவேதனம் செய்வது போன்று விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரங்களிலும் 'பெண்'தான் சாதனம் என்பதைச் சொல்ல வேண்டுமா? ஆனால், வழக்கமான பற்பசை, ஆண் முகம் மழிக்கும் சாதனங்கள், கிரீம்கள், இன்ன பிற பொருட்களின் விளம்பர மில்லாமல், ஆட்கொல்லித் தேய்வு நோய்க்கட்டுப் பாட்டுக்கான விளம்பரம் இது. இந்த விளம்பரத்துக்காகத் தேர்வு செய்யப்படும் நிகழ்ச்சி, "டாப்டென்' எனப்படும் சினிமாக்களி லிருந்து பொறுக்கப்பட்ட ஆட்டபாட்ட கவர்ச்சி நடன நிகழ்ச்சிகள். இடையில் விளம்பர வாசகங்களில் "ஆணுறை விளம்பரம் வரலாம். 'புள்ளி ராஜா என்ற ஆண், கவசம் அணியாமல் மது குடித்த மப்புடன் "பலான பெண்ணிடம் செல்லலாகாது என்ற அறிவுரை வரலாம். மேலும் "பலான பெண் பார்ப்பதற்கு நன்றாகவே இருப்பாள். ஆனால் அவள் நோய்க் கிருமிகளைச் சேமித்துக்கொண்டு கவசமில்லாமல் வருபவர்களைக் குழியில் தள்ளும் நோயைக் கொடுப்பாள் என்பன போன்ற ஆணுக்குத் தேவையான அறிவுரைகளே விளம்பரம். இந்த 'டாப் டென் - டாப்லெஸ் ஆடல்களைப் பார்க்கும், ரசிக்கும் கும்பல் நிச்சயமாக வெறிபிடித்துப் போகும். வெறிபிடித்த நிலையில் ஐந்து வயசு நிரம்பாத பெண் குழந்தையும் இவன் கண்களில் வெறி தீர்க்கும் சாதனமாகத் தோன்றும். கூட்டங்களில் பெண்களைச் சீண்ட வைக்கும். தோளில் உரசுவதும் தொடக்கூடாத இடங்களில் தன் வெறியை இறக்கவும் முயலலாம் என்பதையும் சினிமாக்களே சொல்லிக் கொடுக்கின்றன. இது தவிர இதைத் தடை செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் யாரேனும் குரல் கொடுத்தாலும், வழக்குப்பதிவு செய்தாலும், இலாபம் அவர்களுக்கே! ஏனெனில் அதுவும் ஒரு விளம்பரமே! இந்த ஆட்கொல்லித் தேய்வு நோய் பற்றிய சிக்கலும், அபாயமும், ஒரு கால் நூற்றாண்டுகாலமாகவே, உலகெங்கும் அச்சுறுத்தலோடு, தீர்வுக்கான அறிவார்ந்த ஆய்வுகள், தடுப்பு அவசியங்கள் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நோய் பற்றினால் மருந்தில்லை; மரணமே விடிவு என்ற அச்சுறுத்தல் மனித சமுதாயத்தைப் பாதித்தது. தொழுநோய், காசநோய் போன்ற பிணிகளுக்கு ஆட்பட்டவர்களைச் சமுதாயம் அந்நாள் ஒதுக்கி வைத்தது. தொழுநோய், பாவிக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்று பார்க்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் வெளிப்படையாகத்