பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ உலக 174 பெண்குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஊட்டச்சத்துடைய உணவு அளிக்கப்படுகிறது. உடல் நலக்குறைவென்றால் மருத்துவரிடம் கொண்டு சென்று பராமரிக்கிறார்கள் என்கிறார் அவர். 'சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி இல்லை. இறந்துபோகும் குழந்தைகளில் பாதிக்குமேல் எடை குறைவான குழந்தைகள்தாம். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்களின் ஆண் - பெண் விகிதாசாரம் 1000த்துக்கு 85-90 என்றால், சீனத்தில் 1000க்கு இந்த விகிதாசாரம், 32க்கு 43 பெண் குழந்தைகள் என்பதே உண்மையாக இருக்கிறது!” 'சாதாரண நலப் பராமரிப்பளித்தாலே அறுபது லட்சங்களுக்கு மேலான குழந்தைகள் காப்பாற்றப்படுவார்கள். ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் இந்த நலப் பராமரிப்பு, உயிர்காக்கும் பெரு வாய்ப்புகளாகப் பரிணமிக்கும்” என்று இந்தியாவில் உலக சுகாதார அறிக்கையை வெளியிடும்போது, இந்த நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல், டாக்டர் லிஜங் வூக் கூறினார். இந்த ஆண்டறிக்கையில் தாய் சேய் நலப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் குறிக்கப்படுகிறது. கருவுறுதலும், மகப்பேறும், இந்தியாவில் அதிகமான பெண் மரணங்களுக்குக் காரணமாயிருக்கின்றன. மூன்று கோடி பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் கருவுறுகிறார்கள். இரண்டு கோடியே எழுபது லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. பதிமூன்று லட்சத்து ஆறாயிரம் பெண்கள் உயிர் பிழைப்பதில்லை. பிறக்கும் சிசுக்களில் பத்து லட்சம், ஒவ்வோர் ஆண்டும் மரிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இங்கே தாய் - மரணம், ஒரு லட்சம் மகப்பேற்றுக்கு 115 மட்டுமே!

  • † For