பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சமுதாய... 62 மீண்டும் மைய அரசில் காங்கிரஸ் அல்லாத கட்சியே ஆட்சிக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியும் திரி புராவிலும் அதே பொதுவுடமைக் கட்சியும் ராஜஸ்தானில் பாரதிய ஜனதா ஆட்சியும், மிகப்பெரிய உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சியும் என்று 1994 இல் இந்நாட்டின் குடியாட்சி யில் பல கட்சி முறைகள் கொண்ட பிணைப்பு உருவாயிற்று. உலகிலேயே இந்தியாவைப் போன்ற பல மொழிகளில் பல இனங்கள் பல சமயங்கள் சாதிகள் என்ற பிரிவுகளைக் கொண்ட நாட்டில் பல அரசியல் கட்சிகள் (கொள்கைகள் நழுவிப் போக) ஆட்சியில் பங்கு பெறுவது என்பது மிக மிகச் சிக்கலானதாகும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிக அவசியமான தேவையாகக் கருதப்படும் மக்கள் பெருக்கக் கட்டுப்பாட்டுக்கான குடும்ப நலத்திட்டம் பெண்ணைக் குறிவைத்தே, அவள் உடலை மையமாக்கியே வகுக்கப்பட்டதில் எந்த அரசியல் கட்சிக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. சொல்லப்போனால் தொடக்கத்தில் மகளிர் கருத்தடை சாதனம் ஏற்பதில் சமயம் சார்ந்தே கட்சிகள் முட்டுக்கட்டை போடவில்லை என்றே சொல்லலாம். தொடக்கக் காலத்தில் லூப் சாதனத்தை கோவா பிரதேசத்தில் (அப்போது அது யூனியன் பிரதேசமாக தலைநகர்ஆதிக்கத்தில் இருந்தது) எந்தச்சமய அமைப்பும் ஒரு எதிர்க்குரல் எழுப்பவில்லை. அதேபோல் படிப்பறிவும் சமூக உணர்வும், பொருளாதார சுயச்சார்பும் உடைய மகளிர் சமயம் சார்ந்து கருத்தடை முறைகளை எதிர்க்கவில்லை என்பதே உண்மை. அதனால்தான் கேரளம் போன்ற மாநிலங் களில் மக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு மகளிர் நலமும் பேணப்பட்டிருக்கிறது. சாதி, சமயம் சார்ந்த கட்சிகள் தம் அரசியல் ஆதாயங்களுக்காகவே கட்டுப்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடையே விதைக்கிறார்கள். மத அடிப்படை வாதம் பெண் களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவே கோலோச்சி வந்திருக்கிறது. மதச்சார்பற்ற' என்ற குடையின் கீழ் மணவிலக்குப் பெற்ற பெண்ணுக்கு ஜீவனாம்சம் உரிமை மதச்சட்டத்துக்கப்பால் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும், அங்கே மத அடிப்படைவாதம் ஆட்சியையே பதம் பார்க்க முனைந்தது. 'ஜீவனாம்சம்' வேண்டாம் என்று அவளே விலகிக்கொள்ள, சீரணம் செய்ய முடியாத நிகழ்வுகள் மக்களாட்சி உரிமைகளில் பல உறுத்தல் களைக் கொண்டு வந்திருக்கின்றன. இதில் முக்கியமானது பலதார