உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ரூபாய் இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் வரிப் போடு தில் தாங்கக் கூடியவர்களுக்கு வரி, தாங்கமுடியாதவர்களுக்குப் புதிதாக வரி போடக் கூடாது என்கின்ற கொள்கை. போடுகின்ற வரிகளின் மூலம் விலைவாசியோ அல்லது மற்றக் காரியங்களோ உயர்ந்து விடாமல் அதை ஒரு கட்டுக்கோப்புக்குள்ளே அடக்கி வைக்க வேண்டும் என்கின்ற அந்த இலட்சியம் இந்த அடிப்படை யில்தான் நாம் வரி போடும் கொள்கையைக் கடைப்பிடித்து வரு கின்றோம். அந்த நிலையில் 10 கோடி ரூபாய்க்கு இந்தப் பற்றாக் குறையை ஈடுசெய்வதற்காக நாம் வரி போட்டிருக்கிறோம் என்றால் மோட்டார் வரிச் சீர்திருத்தத்தின் வழியாக 6.5 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுக் காலமாக வியாபாரிகள் பல முனை விற்பனை வரி தருவதை ஒரு முனை விற்பனை வரி என்று மாற்றிட வேண்டும் என்று செய்து வத்த கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் 59 பொருள்களுக்கான பலமுனை வரியை ஒருமுனை வரியாக ஆக்கியதன் காரணமாகவும். அந்தச் சீரமைப்பிலே வருகின்ற வருவாயும். அதையொட்டி 50.000 ரூபாய் வரையிலும் வியாபாரம் செய்கின்றவர்களுக்குச் சலுகை கொடுத்து, 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கின்ற வர்களுக்குச் சர்-சார்ஜ் 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் என்று, தாங்கக்கூடியவர்களுக்கு அதை உயர்த்தியதன் காரணமாக வும் 3.5 கோடி ரூபாயும் ஆக மொத்தம் இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட 10 கோடி ரூபாய் நாம் இன்றைக்கு வரி விதித்திருக்கி றோம். வரி விதித்திருக்கிறோம் என்று சொல்வது கூடச் சரியல்ல. வரி விதிப்பில் மாற்றம் செய்திருக்கின்றோம். நாட்டிலே அத்தியாவசியப் பொருட்களின் அகவிலைப் படியை நிர்ணயிப்பதற்கு என்றே சிவ பொருள்கள் இருக்கின்றன. அக விலைப்படியை எந்தப் பொருள்களைக் கொண்டு நிர்ணயிக்கிறார் கள் என்பதை நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும். அந்தப் பட்டியலில் உள்ளவற்றை நான் உங்களிடத்திலே சொல்ல விரும்பு கிறேன். அரிசி, கோதுமை, சர்க்கரை, கேப்பை, பச்சைப் பயறு, என்று ஆரம்பித்து, பூண்டு வெந்தயம் என்றெல்லாம் தொடர்ந்து நல்லெண்ணெய், கடலை எண்ணெய், முட்டை, பால், தயிர். நெய் என்றெல்லாம் நீண்டு, பொடி, ஜிலேபி, விறகு, மண்ணெண் ணெய், மின்விசைக் கட்டணம் என்றெல்லாம் தொடர்ந்து, தலை யணை உறை, செருப்பு.குடை, பெட்டி என்றெல்லாம் மீண்டும் நீண்டு முகப் பவுடர், பற்பொடி, தையற் கூலி என்கின்ற வகையில் இப்படி 100 பொருள்கள்-இந்த 100 பொருள்களும்,தான் அத்தி யாவசியப் பொருள்கள்! எதற்கு அத்தியாவசியப் பொருள்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/12&oldid=1701897" இலிருந்து மீள்விக்கப்பட்டது