உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கோடி ரூபாய்க்குப் போடப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில், வருவாய்க் கணக்கில் வருவாய் 367 கோடி ரூபாய்க்குப் போடப்பட்டு, செலவு 362 கோடி ரூபாய்க்குக் காட்டப்பட்டு, உபரி 4 கோடி ரூபாய் என்று காட்டப்பட்டு, 19 கோடி ரூபாய்க்கு வரி போடப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் வரவு செலவு விவரங்கள் இல்லா விட்டாலும் பற்றாக்குறை 21 கோடி ரூபாய் என்றும், வரி விதிப்பு 17 கோடி ரூபாய்க்குப் போடப்பட்டிருக்கிறது என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், 470 கோடி ரூபாய் வருவாயும், 483 கோடி ரூபாய் செலவும் உள்ள நம்முடைய வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை 12.56 கோடி என்பதும், நாம் போட்டிருக்கின்ற வரி 10 கோடி ரூபாய் என்பதும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிற நேரத்தில் அதிகம் இல்லை என்பதையும் நான். இந்த மாமன்றத்தின் மூலமாகத் தமிழ் நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்குக் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு வேளை . . திரு. கே.டி.கே. தங்கமணி : இந்த லிஸ்டில் கொடுத்திருக் கும் 59 பொருள்களைப் பற்றிக் குறிப்பிட்ட காரணத்தால் கேட் கிறேன். ஆயில் கேக்குக்கு வரி போடவில்லை என்ற முறையில் பிரசங்கம் இருந்தது. ஆனால் இதற்கு 3.5 சதமானம் வரி இருப் பதையும், ஏரியேடட் வாட்டர்சுக்கு 5 சதமானம் வரி இருப்பதை யும் பார்க்கிறோம். இவை எல்லாம் சாதாரண மக்கள் உபயோகப் படுத்தக்கூடிய பொருள்கள் அல்லவா? மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : மாட்டுத் தீவனத்திற்கு விதி விலக்கு என்று சொன்னோம். ஏற்கெனவே. எண்ணெய்களுக்கு விதி விலக்கு தற்காலிகமாகச் செய்திருக்கிறோம். இப்போதும் அமலில் இருக்கிறது. ஆனால் அந்த விதிவிலக்குச் செய்ததன் காரண மாக விலை குறைந்ததா என்றால், இல்லை. அதையும் நாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விதிவிலக்கைப் பெரிய வியாபாரிகள் அனுபவிக்கிறார்களே யல்லாமல் வாங்கி நுகர்வோர் யாரும் (கன்ஸ்யூமர்ஸ்) பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட வில்லை. அதையும் மனத்திலே வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிண்ணாக்கைப் பொறுத்தவரை 3.5 சதவிகிதமாக ஆக்கி யிருக்கிறோம். அதைப் போல் எண்ணெய்க்கு 3.5 சதவிகிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/15&oldid=1701900" இலிருந்து மீள்விக்கப்பட்டது