உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திட்டக் குழு என்ன செய்திருக்கிறார்கள்? நிதிக் குழுவில் என்ன செய்திருக்கிறார்கள்? ஒரு புதிய தலைப்பு. என்ன தலைப்பு? 'நிர்வாகத்தைச் சீரமைத்து மேம்படுத்தும் மானியம் Up-Graduation Grants அந்த மானியம் அந்தத் தலைப்பில் சில மாநிலங்களுக்கு உதவித் தொகை, சிறப்புத் தொகையாக அளிக் கிறார்கள். அதைப் பெற முடியாத மாநிலங்கள் எவையெவை? தமிழ் நாடு, குஜராத், கேரளம், மராட்டியம் ஆகிய இந்த நான்கு மாநிலங்களும் அந்த மானியத் தொகையைப் பெற முடியவில்லை. மான்யம் கிடையாது மக்திய அரசு கல்வி மக்கள் நல்வாழ்வுக்கு அதிகச்செலவு கக குற்றம் ஆனால் நிர்வாக மேம்பாட்டுக்காக, எந்தக் காரத்ணதைக் காட்டு கிறார்கள்? சுல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற துறைகளில் இது வரையிலே அதிகம் செலவு செய்யாமல் இருக்கிற மாநிலங்களுக்கு “Up-Graduation Grants என்று தருகிறார்கள். அப்படித் தருகின்ற அத்த மானியம், உத்திரப் பிரதேசத்திற்கு 290 கோடி ரூபாய்; பீகாருக்கு 165 கோடி ரூபாய்; மேற்கு வங்கத்திற்கு 72 கோடி ரூபாய்: ஒரிஸ்ஸாவுக்கு 57 கோடி ரூபாய்; ஆந்திரத்திற்கு 52 கோடி ரூபாய்; மத்தியப் பிரதேசத்திற்கு 50 கோடி ரூபாய் மைசூருக்கு 27 கோடி ரூபாய். தமிழகம், குஜராத், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங் கள் கல்வி, மக்கள் வாழ்வு போன்ற துறைகளில் அதிகம் செலவு செய்திருக்கின்றன என்ற காரணம் காட்டி இந்த மானியம் தர மறுக்கப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/19&oldid=1701911" இலிருந்து மீள்விக்கப்பட்டது