உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : ஒரே ஒரு ஐந்தாண்டுத் திட்டம் போட்டுக் கதையை முடித்து விட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டமும், மற்றொரு ஐந்தாண்டுத் திட் டத்தைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. அப்படிச் சக்கரம் போல் போய்வரும் நிலைமையில் ஒரு முறை திட்டச் செலவாக இருந்தது, அடுத்த முறை திட்டம் ல்லாத செலவாக ஆகிவிடுகின்றது. ஆகவே இதைக் குறைக்க முடியாது. அம்மையார் அவர்கள் நான்-ப்ளான் எக்ஸ்பெண்டிச்சர்' என்ப $ இஐந்தாண்டுத் திடம இர யது ஐத்துந் திட்டம் திட்டம் அந்தாண்டுத் னேறியது றெரு ஐந்தா நாளிது இந்தாண்டுத் ஐந்தான் தாட்டு இந்தாண்டுத் னே நறத்திற் திட்டம் த்தைத்துக போகிறது தற்குப் பதிலாக 'நான்-டெவலப்பெண்ட் எக்ஸ்பெண்டிச்சர்' என்று கூறியிருப்பார்களேயானால் அதை விவாதிப்பதிலே அர்த்தமுண்டு. ஆகவே நான்-ப்ளான் எக்ஸ்பென்டிச்சர் என்பது குறைப்பதற்கு ஏதுவான ஒன்று அல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்ளு வேன். நம்முடைய நண்பர். கம்யூனிஸ்ட் கட்சிச் சார்பில் பேசிய திரு. வடிவேல் அவர்கள் பேசுகிறபோது நிலச் சீர்திருத்தத்தால் எடுத்த நிலங்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்கள். அல்லது எவ்வளவு நிலம் எடுத்தீர்கள்? எவ்வளவு நிலம் எடுத்தது. எத்தனை ஏக்கர் எடுத்தது என்றெல்லாம் கேட்டார்கள். ஆகவே. பெயருக்கு ஏற்றாற்போல் ஆக்ரோஷமாகவே பேசினார்கள். அவரு டைய உருக்கமாகவும், உணர்ச்சி வசமாகவும் இருந்த அந்தப் பேச்சில் நிலங்கள் எல்லாம் எங்கே, எங்கே என்று கேட்டபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/21&oldid=1701913" இலிருந்து மீள்விக்கப்பட்டது