உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர் திரு. குமார சாமி அவர்கள் பேசும்போது, இந்த அரசு நீர்ப் பாசனத்திற்காக என்ன திட்டங்களைத் தீட்டியது? என்ன காரியங்களைச் செய்திருக் கிறது?' என்றெல்லாம் கேட்டார்கள். இந்த அரசு பொறுப் பேற்றுக் கொண்ட பிறகு பரம்பிக்குளம் - ஆளியாறு திட்டத்தில் ஏற்கெனவே இருந்து இடையில் தேங்கிவிட்டு நின்றதைப் புதுப் பித்து 68,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிற நிலைமை இருந்தனத் 1,42,000 ஏக்கர் என்று அதிகப்படுத்தி யிருப்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. பட்டணங்கால் திட்டத்தின் முழு சித்தாறு மணிமுத்தா நதி கடனாக வைகைக் கால்வாய் பரப்பலாறு இராமநதி சின்னறு பாலார் தண்டரை அணைக்கட்டு நந்தன் கால்வாய் கருப்பாநதி பொரந்தலாறு மருதாநதி பிளாக் 77 1-87-530 ஏக்கர் சாகுபடி சக்தியையும் உபயோகித்து 47.000 . பயிர் ஏக்கர் இப்போது செய்யப்படுகிற சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்கள் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மணி முத்தா நதி, நெல்லை மாவட்டத்தில் இராம நதித் திட்டம் நெல்லை மாவட்டத்தில் கூடனாறு திட்டம். மதுரை.இராமநாத புரத்தில் வைகைக் கால்வாய் புதுப்பித்தல் திட்டம். மதுரையில் பரப்பலார், மதுரையில் பாலார், பொரந்தலார், தருமபுரியில் சின்னாறு திட்டம். வட ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டத்தில் தண்டரை அணைக்கட்டுத் திட்டம். வட ஆர்க்காடு, தென் ஆர்க் காட்டில் நந்தன் கால்வாய் புதுப்பிக்கப்படும் திட்டம், நெல்லை மாவட்டத்தில் கருப்பா நதி திட்டம், திருச்சியில் பொன்னையாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/24&oldid=1701917" இலிருந்து மீள்விக்கப்பட்டது