உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வைகளெல்லாம் தனியார் துறையில் உரத் தொழிற்சாலையை யாராவது நிறுவுவதாக இருந்தால், அதற்குப் பண உதவி செய்யத் தயாராக இருந்தன. இ தைத் தனியார் துறைக்கு விட்டுவிடக் கூடாது. பொதுத் துறைக்கு இல்லை. மத்திய சர்க்காரும் கை விரித்து விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் மாநில அரசு தலை யிட்டு அதைக் கூட்டுத் துறையாக ஆக்கி அதில் தானும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு 26 சதவிகிதம் அரசுக்கும், 25 சதவிகிதம் தனி யாருக்கும், மீதமுள்ள 49 சதவிகிதம் பொதுப் பங்குகள் என்ற வகையிலும் அந்தக் கூட்டுத்துறை முயற்சியில் நாம் ஈடுபட்டோ மேயல்லாமல் பொதுத் துறை வேண்டாம் என்பதற்காக அல்ல ; பொதுத் துறைக்கு வராமல் முழுக்க முழுக்கத் தனியார் துறைக்குப் போகக்கூடிய சூழ்நிலை,மத்திய அரசு நம்முடைய கோரிக்கையை மறுத்த காரணத்தால் - நாம் கூட்டுத் துறை என்ற அளவிலாவது வர வேண்டும் என்கின்ற முயற்சியை எடுத்துக் கொண்டோம் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின் றேன். திரு. கோவை செழியன் : பேரவைத் தலைவரவர்களே, 85 கோடி ரூபாய் மூலதனம் போட்ட நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மட்டும் போட்ட, ஒரு தனி நபரின் நிர்வாகத்தில் இந்த உற்பத்தித் தொழிற்சாலையின் முழுப் பொறுப்பை விடுவது நியாயமா? அவர்கள் தங்களுடைய இந்தத் தொழிற்சாலைகள் மூலமாக காண்டி ராக்ட்கள் எடுப்பது நியாயமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிற முறையிலேதான் நாம் 26 சதவிகிதம் வைத்து இருக்கிறோம். இதிலே இயக்குநர் என்கின்ற அளவிலேகூட அர சாங்கத்தின் சார்பில் 4 இயக்குநர்கள் அதிலே இருக்கின்றார்கள். இருக்கின்ற சங்கடத்தைச் சொன்னேன். பொதுத் துறைக்கு மத்திய சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. இதைத் தவிர வேறு வேறு வழி இல்லாமல் நாங்கள் செய்து இருக்கிறோம். தவறு ஏற்படாமல் செய்வதற்கு அரசு கண்காணிப்போடு இருக்கும் என்ற ஒரு உறுதியை நான் நிச்சயமாகத் தெரிவித்துக் கொள் கிறேன். திரு. கே. டி. கே. தங்கமணி : மத்திய சர்க்கார் உரத் தொழிற்சாலைகள் எல்லாம் பொதுத் துறையில்தான் இருக்க வேண்டுமென்று 'இன்டஸ்டிரியல் பாவிசி ரெசல்யூஷன்' போட்டு ருக்கிறார்களே, அதை மத்திய சர்க்கார் மாற்றி வீட்டதா என்று அறிய விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/26&oldid=1701919" இலிருந்து மீள்விக்கப்பட்டது