உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டமன்ற மேலவையில் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவரவர்களே, நிதி நிலை அறிக்கையின் மீது மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும், கட்சி யின் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை இந்த மன்றத்திற்கே உரிய முறையில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவ ருக்கும் நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரி வித்துக் கொள்ளுகின்றேன். இந்த வரவு-செலவுத் திட்டம் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியதைப்போல் பொது மக்களை ஒவ்வொரு ஆண்டும் அச்சம் ஊட்டுகின்ற வகையிலே வெளி வருகிறது, என் னென்ன வரிகள் வருமோ என்று பயப்படுகின்ற நிலையிலே வெளி வருகிறது என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். இந்த ஆண்டு வரவு- செலவுத் திட்டம் வரிகள் சிலவற்றை விதித்திருக்கிறோம் என்கின்ற அறிவிப்பைத் தந்தாலும். அது எந்தப் பகுதி மக்களைப் பாதிக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், அதை ஒரு வரி விதிப்பு அல்லது மக்களை வாட்டுகின்ற தன்மையிலே உருவாக்கப்பட்டது என்று கூறிடுவதற்கு இடமே இல்லை என்பதை நாள் முதலில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். . பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் பேசிய நண்பர் சக்தி மோகன் அவர்கள், இடைத் தேர்தல்களுக்குப் பிறகு வருகின்ற நிதிநிலை அறிக்கை என்கின்ற காரணத்தினால், வாக்கு அளிக்காத வர்களை எல்லாம் தண்டிக்கின்ற முறையில் இந்த அறிக்கை அமை யும் என்று சிலர் எதிர்பார்த்ததாகவும், அதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வெளி வந்திருப்ப தாகவும் எடுத்துச் சொன்னார்கள். எந்த ஒரு ஆட்சியானாலும். மத் களால் தேர்ந்து எடுக்கப்பட்டு, பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு இடையிலே வருகின்ற இன்னல்களைப் பற்றிச் சிந்திக்காமல், இடை யிலே வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களைப்பற்றிக் கவலைப்படாமல், தன் னுடைய ஆட்சிக்காலத்தில் தான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற பொறுப்பை இனிதே நிறைவேற்றுவதற்கும். கடமையைச் செம் மையாகச் செய்து முடிப்பதற்கும் உறுதி எடுத்துக் கொள்ள வேண் டும். அந்த வகையிலேதான் நிதிநிலை அறிக்கையினுடைய தொடக் கத்திலேயே கடமையைச் செய்கின்ற மழையைப்பற்றி வள்ளுவர்ப் பெரியார் எந்த அளவுக்குப் புகழ்ந்து வைத்திருக்கிறார் என்கின்ற குறளை இணைத்து, இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டி ருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/40&oldid=1701941" இலிருந்து மீள்விக்கப்பட்டது