உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R 50 கருத்தை ஏற்றுக்கொண்டு, குழு நம்முடைய 'கார்ப்பரேஷன் டாக்ஸ்ஸை' மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதைப்பற்றி விவாதிக்கலாம் என்று சொல்லியிருக்கின்ற சுருத்தை, வருகின்ற என்.டி.சி.கூட்டங்களில் ஆராய வேண்டும் என்று நான் பிரதம ருக்கும், திட்டக்குழு அமைச்சர் அவர்களுக்கும், நிதியமைச்சர் அவர்களுக்கும். நம்முடைய தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலமாக இன்றையத் தினம்கூட - எழுதியிருக்கின்றேன். ஆகவே ஒரு நல்ல சுமுகமான - நாமெல்லாம் விரும்புகின்ற முடிவினை மத்திய அரசு. அதனுடைய அமைச்சர். இந்தத் துறையினர் அனை வரும் ஏற்றுக்கொண்டு மாநிலங்களுக்குக் 'கார்ப்பரேஷன் டாக் ஸை பகிர்ந்தளிக்க முன்வருவார்கள் என்றும் நான் நம்புகின் றேன். இப்படிப்பட்ட காரியங்களில் எதிர்க்கட்சியிலே உள்ள உறுப் பினர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடத்திலே எதிர்பார்ப் பது, மத்திய அரசிடத்திலே கேட்பது என்கின்ற முறை இருக்கக் கூடாது. நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ற கேட்கின்ற ே நரத் தில், சற்றுச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிந்திக்க வேண்டுமென்று சொல்வதால் கோபித்துக் கொள்ளக் கூடாது. சிந்தித்தாலும் கூட, ஆளுங்கட்சியைக் குறைகூற வேண் டும் என்பதற்காக, ஏதாவது சொல்ல வேண்டும் என்கின்ற கருத் திலே சொல்லவும்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூடச் சொன்னார்கள். உரம் கிடைக்கவில்லை' தெரிகிறது; இருந்தா லும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். என்ன தமிழ்நாடு அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/51&oldid=1701957" இலிருந்து மீள்விக்கப்பட்டது