உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தயாரிப்பதற்கு அரசு நல்ல முறையிலே உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது குறித்துப் பாவாணர் அவர்களிடத்தில் தொடர்பு கொண்டபோது, நம்முடைய கல்வி அமைச்சர் அவர்கள் பல விவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் கள். அதற்கு ஆகின்ற செலவு, இன்றைக்கு அதிகமாகத் திட்டம் போட்டுக்காட்டப்படுகின்ற காரணத்தினாலேதான் தயக்கம் ஏற் き பட்டிருக்கிறது. அடிகளார் அவர்கள் மீண்டும் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகைக்குள்ளாக இந்த அகராதியைத் தயாரித்துக் கொடுப்பதற்கு அவர்கள் யாவாண ரோடு தொடர்பு கொண்டு முன்வருவார்களானால், அந்த அக ராதி; 'அகர முதலி' என்பது, ஏதோ இன்னும் 10 ஆண்டுக்காலம் இருபதாண்டுக்காலத்தோடு முடிந்துவிடுகிற விஷயம் அல்ல. நுற்றாண்டுக் காலத்திற்கு, ஆயிரமாண்டுக் காலத்திற்குப் பிறகும் பயன்படக்கூடிய ஒரு பெரிய முயற்சி என்கின்ற காரணத்தால்- அதற்கு இந்த அரசு உதவிடச் சித்தமாக இருக்கிறது என்கின்ற உறுதியையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன். யைப் < திரு.செ. முத்துசாமி: இந்த 'அகர முதலி' என்ற அகராதி பொறுத்தவரையில் நீண்ட ஒரு பெரிய தொகையாகப் போட்டுக் காட்டப்படுகிறது என்று முதலமைச்சர் அவர்கள் இங்கே கூறினார்கள். அப்படி என்ன தொகை போட்டுக் காட்டப் படுகிறது என்பதை அவர்கள் இப்பொழுது கூறுவார்களா? இப பொழுது என்ன திட்டத்திலே என்ன செலவு என்று போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுவார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன். மாண்புமிகு .ாக்டர் மு. கருணநிதி : அதைக்கூறி, அதைப் பற்றி ஒரு விவாதம் இப்போது நடத்த வேண்டாம் என்று நான் விரும்புகின்றேன். அது பரிசீலனையில் இருக்கிறது. நல்லவிதமாக முடிவெடுக்கப்படும். ஆகவே அவைகளையெல்லாம் இப்பொழுது கிளறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திரு.செ.முத்துசாமி: விவாதத்திற்காக நான் கேட்கவில்லை. தமிழை வளர்ப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளிலே பாவாணர் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு. ஒரு பெரிய முயற்சியிலே ஈடு பட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள். மொழி வளர்ச்சியிலே அக் கறை இருக்கக்கூடிய அரசு அந்தச் செலவினத்தைப்பற்றிக் கவலைப் படாமல், அதைப்பற்றி மீண்டும் மீண்டும் காலம் தாழ்த்தாமல். அந்தச் செலவினத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாகச் செய் வதற்கு அரசு முன்வர வேண்டும்; முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/57&oldid=1701969" இலிருந்து மீள்விக்கப்பட்டது