உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 திரு.கே.ராஜாராம் : இந்த மாதிரி அடிக்கடி அதுதான் சட்டசபை, து ஏதோ உபரிசபை மாதிரி நினைக்கிறது தப்பு. இரண்டும் 'ஈக்வல் ஸ்டேடஸ்' இரண்டு சபையும் ஈக்வல் ஸ்டேடஸ் என்பதை முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன். நான் லே திரு.ம.பொ.சிவஞானம்: எதிர்க்கட்சித் தலைவர்-கருத்தை ஆதரிக்கிறேன். மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : இந்த ஒரு கருத்தில் இருவரும் உடன்பட்டதற்காக மகிழ்கிறேன். காவிரிப் படுகையி எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு முயற்சி எந்த வகையிலே இருக்கிறது என்கின்ற ஒரு கேள்வியை நம்முடைய நண்பர் வசந்த பாய் அவர்கள், அவர்களுடைய உரையிலே எழுப்பினார்கள். இந்த எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிப்பதற்காக இந்திய அரசினுடைய . நாகை. எண்ணெய் இயற்கை வாய்வு ஆணைக் குழு ஒன்று. கடந்த 1958 - ஆம் ஆண்டிலேயிருந்து நம்முடைய மாநிலத்தில், திருப்பூண்டி, சிதம்பரம், சாலியமங்கலம், காட்டுமன்னார்கோவில் ஆசிய டங்களில் துளையிடும் பணியை மேற்கொண்டு, இதுவரை யிலே 10 இடங்களில், அதுபோன்ற கிணறுகளைத் தோண்டியது ஆனால் குறைந்த அளவிலேதான் எண்ணெய் கிடைத்தது. அதிக அளவில் எண்ணெய் கிடைக்கவில்லை. தொடர்ந்து கடலோரப் பகுதிகளிலும் சோவியத் நாட்டினுடைய ஆய்வுக் கப்பல்கள் எண் ணெய் கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் இருக்கின்றனவா என்று அவைகளும் ஆராய்ச்சி நடத்தி, அந்த வாய்ப்புக் கூறுகளும் ஓரளவிற்குத்தான் இருக்கின்றன. அதிக அளவிற்கு எண்ணெய் கிடை க்கவில்லை என்ற முடிவுகள்தான் இதுவரையிலே வந்திருக்கின் றது. ஆயினும் தொடர்ந்து காரைக்கால், மாயூரம் பகுதிகளிலே இந்திய அரசினுடைய எண்ணெய் குழுவினர் இந்தப் பணிகளை நடத்தி வருகின்றார்கள் என்ற விளக்கத்தை மாத்திரம் நண்பர் வசந்த பாய் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வேன். நம்முடைய நண்பர் சுந்தரேசத் தேவர் அவர்கள் நேற்றையத் தினம் பேசும்போது. "மாநில திட்டக்குழு என்ன என்ன வேலை களைச் செய்திருக்கிறது? விவர அறிக்கைகள் சபையிலே வைக்கப் படவில்லை' என்றெல்லாம் சொன்னார்கள். அதுபற்றி எதிர்க் கட்சித் தலைவர் அவர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். மாநில திட்டக் குழுவினுடைய வரைவு அறிக்கையும் மாநில திட்டக் குழு விற்கு அளிக்கப்பட்ட துணைக் குழுக்களுடைய -டாஸ்க் ஃபோர்ஸ்' -அறிக்கைகளும், இந்த மாமன்றத்திலேயுள்ள உறுப்பினர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/60&oldid=1701972" இலிருந்து மீள்விக்கப்பட்டது