உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாட கான மாப்பிள்ளையைப் பழித்துப் பாடுவார்கள். அதைப் போலவே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் அழகான பெண்ணைப் பழித்துப் பாடுவார் கள். இந்த அழுமூஞ்சி மாப்பிள்ளைதான் எங்கள் அழகான பெண்ணுக்குப் பொருத்தமா?' என்று பெண் வீட்டார் உடனே மாப்பிள்ளை வீட்டார் 'இந்தச் சுடுமூஞ்சிப் பெண்தான் எங்கள் சுந்தரனுக்குப் பொருத்தமோ?' என்று பாடுபவார்கள். இது நலுங்குப் பாட்டு. ஆகவே எதிர்த்துப் பேசிய கருத்துக்களில், அழகாக இருந்தாலும் நலுங்கு பாடுகின்ற நேரத்திலே மாப்பிள் ளையையோ, மணமகளையோ பாராட்ட வேண்டும் என்கின்ற எண்ணம் எப்படியிருந்தாலும், பாடியது நலுங்காயிற்றே என்ப தற்காக, கேலி பேசுவதும் கிண்டல் பேசுவதும் நம்முடைய கல்யாண வீடுகளிலே நடைபெறுகின்ற வழக்கம் அந்த லகை யிலே இது லாலியாக இல்லாவிட்டாலும் நலுங்காக அமைந்த தற்காக நான் நன்றி கூறிக்கொள்ளுகிறேன். அந்தக் காரணத்தினால், பாடப்பெற்ற பாட்டிலே உள்ளதற்கு ஏற்றதாகத்தான் இந்த அரசு இருக்கிறது என்று நான் நிச்சயமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த அளவில், தரப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பற்றி மொத்தமாக- பொதுவாக சில சுருத்துக்கள் இங்கே கூறப்பட் டன. அந்தக் கருத்துக்களைப் பொறுத்த வரையில் வரவு செலவுத் திட்டம் எந்த வகையிலே அமைகிறது என்றால் வளர்ச்சி வேகத்தைப் பெருக்குவதற்கும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவ தற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதற்குமான இந்த முக்கியமான பிரச்சினைகளோடு தொடர்பு கொண்டதுதான் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளாகும்! அப்படித் தொடர்பு கொண்டிருக்கிற அந்த நிலைமையை. நிலைவாசிகளைக் குறைக்க, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க என்கின்ற இரண்டு தலைப்புக்களிலே பார்த்தோமேயானால், அது மாநில அரசு தயாரித்து வெளியிடுகின்ற வரவு செலவுத் திட்டத்திலே அதிகமான தொடர்பு கொண்டிருக்கிறதா அல்லது மத்திய அரசு தயாரித்து வெளியிடுகின்ற வரவு செலவுத் திட்டத் திலே அதிகமான தொடர்பு கொண்டிருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது தேசிய மட்டத்திலே விலைவாசிகளைக் குறைக்க, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க - தேசீய மட்டத்தில் மத்திய அரசின் சார்பாக வெளியிடப்படுகின்ற வரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/9&oldid=1701894" இலிருந்து மீள்விக்கப்பட்டது