பக்கம்:உரிமைப் பெண்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

உரிமைப் பெண்

 னேன். அதில் அவன் பலமுறை நான் கூறும் யோசனைக்கு உடன்படாதிருப்பதை எடுத்துக் காட்டியதோடு அதனால் எனக்கேற்பட்டுள்ள மன வருத்தத்தையும் வெளிப்படுத்தி யிருந்தேன்.

“அக் கடிதத்திற்கு ரங்கசாமி பல நாட்கள் பதில் எழுதவே இல்லை. எனது கடிதம் அவன் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டதென்று நான் மகிழ்ச்சியடைந்தேன். கொஞ்சம் மனம் மாறியிருக்கிற சமயத்திலேயே இணங்கச் செய்து விடவேண்டுமென்று மேலும் இரு நீண்ட கடிதம் வரைந்தேன். அதில் அவனிடம் எனக்குள்ள அன்பைப்பற்றி விரிவாக எழுதினேன். என் சொல்லுக்கு மீறி அவன் நடந்தால் என் அந்திய காலம் சந்தோஷமாக இருக்காது என்றும் எடுத்துக் காட்டினேன்.

"இதற்கு அவனிடமிருந்து பதில் வந்தது:

‘அன்பு நிறைந்த தந்தையவர்களுக்கு,

எனது பணிவான வணக்கம். தாங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும் என் உள்ளத்தைக் கலக்குகிறது. என்னுடைய நலத்திற்காகவே திட்டம் வகுக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால் வாழ்க்கைத் துணையைத் தேடுகிற விஷயத்தில் நீங்கள் கொண்டுள்ள முறை சரியென்று எனக்குத் தோன்றவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணை நான் மணந்து கொண்டால்தான் இல்லறம் இன்பமாக நடக்கும். செல்வத்தால் மட்டும் ஒருவன் இன்பம் எய்திவிட முடியாது. எத்தனேயோ செல்வர்கள் வாழ்க்கையில் இன்பங்காணாமல் வாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நான் பல தடவைகளில் தங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்காக என் மீது குறை கூறுகிறீர்கள். கல்யாண விஷயம் ஒன்று தவிர வேறு எதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/113&oldid=1138379" இலிருந்து மீள்விக்கப்பட்டது