பக்கம்:உரிமைப் பெண்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உரிமைப் பெண்


மானேஜருக்கு விஷயம் விளங்கவில்லை. பெட்டி சரியானபடி பூட்டித்தானே இருந்தது?” என்று கேட்டுக் கொண்டே தலைமைக் கணக்கரை உற்றுப் பார்த்தார்.

நடராஜ பிள்ளையின் முகத்தில் என்றும் இல்லாத வேதனையின் சாயல் படரலாயிற்று. கொஞ்ச நரம் அசைவற்று நின்றுகொண்டு இருந்துவிட்டுப் பிறகு அவர் நிதானமாகப் பேசலானர் : நேற்றுச் சாயங்காலம் எனக்கு அவசரமாக இரண்டாயிரம் ரூபாய் வேண்டியிருந்தது. இருப்பிலிருந்து அதை எடுத்தேன். இதோ அதை இப்பொழுது திருப்பிக் கொண்டுவங்திருக்கிேறன்.

இவ்வளவுதான் அவர் சொன்னது. வேறு மன்னிப்பு வார்த்தைகளோ அருணாசலத்தைப் பற்றிய விஷயமோ அவர் கூறவில்லை. தம் பையில் இருந்த இாண்டாயிரத்தையும் மானேஜர்முன் வைத்துவிட்டுத் தம் ஸ்தானத்தில் போய் அமர்ந்துகொண்டார்.

மாலையில் காரியாலயம் மூடப்போகும் வரையில் இது சம்பந்தமாக மானேஜர் பேசவே இல்லை. அவர் எந்த நிமிஷமும் தம்மைக் கூப்பிட்டு விசாரிப்பார் என்று தலைமைக் கணக்கர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கூப்பிடுவதாகக் காணோம். அந்தச் சங்கடமான நிலைமையை நடராஜ பிள்ளையால் தாங்க முடியவில்லை. அவர் உள்ளம் வெடித்துப் போகும்போல் இருந்தது.

மானேஜருக்கும் என்ன செய்வதென்று தோன்றாமல் இருந்திருக்கவேண்டும். அவர் பலவிதமாக அதைப்பற்றிச் சிந்தித்துக் கடைசியில் ஒரு தீர்மானத்திற்கும் வர இயலாமல் குழம்பிக்கொண்டிருந்திருப்பார் என்பது என் உத்தேசம். மாலை ஐந்து மணிக்குக் குமாஸ்தாக்கள், காஷியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/57&oldid=1137327" இலிருந்து மீள்விக்கப்பட்டது